உலகில் தன் இன்பத்தை நாடுகின்றவன் மனிதன் அல்ல. எல்லோரும் இன்புற்று வாழ, தீமை செய்பவரை கண்டால் திருத்த முயல்பநே மனிதன். அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித வாழ்க்கை வளர்ச்சி பெற இலக்கியத்தை படைத்தவர் முதற்பாவலர்.
பண்பாடு:
பண்பாடு மலர்ந்த பொழுது சமுதாயம் தோன்றியது. பண்பாடு என்பது மனிதநேயம் உள்ள ஒருவர் மற்றவருக்காக வாழப் பழகிய காலத்தில் தோன்றியது. உள்ளத்தில் அன்புடையவராக இருத்தல், நல்ல குடியில் பிறத்தல் ஆகிய இரண்டும் ஒருசேர பெற்றவன் சிறந்த பண்புடையவனே என வள்ளுவர் கூறுகிறார்.
"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு"
மேலும்,
"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மண்"
என்ற குறட்பாவின் மூலம் பண்புடையவர்கள் வாழ்வதால்தான் இவ்வுலகம் அறியாமல் நிலைபெற்று இயங்குகிறது. இல்லையெனில் இவ்வுலகம் உயிர்கள் மண்ணின் கண் மாய்ந்து விடுமாம்.
அறிவுடைமை:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அவ்வறிவு மெய்ப்பொருள் காண்பதேயாம் என அறிவுக்கு இலக்கணம் வகுத்துக் கூறிய வள்ளுவர.
"அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்"
எனப் புகழ்கிறார். பிறர் உயிர்களுக்கு உண்டாகும் துன்பத்தை நமக்கு வந்தது போல நினைத்து காப்பாற்றா விட்டால் பெற்ற அறிவினால் என்ன பயன்? என்றும் கூறுகிறார். இதனை,
"அறிவினான் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய்
தம்மைப்போல் போற்றாக் கடை"
சென்றஇடத்தால் செலவிடாது, நன்றின்பால் உய்ப்ப தறிவு, பிறர் வாய் நுண் பொருள் காணும் சிறப்புடையது என்று தெய்வப்புலவர் எடுத்துரைக்கும் கருத்துக்கள் சீரிய சிந்தனை தெளிவு உண்டாக்குவதாக அமைந்துள்ளது.
நிலையாமை:
உலகில் நிலையாமை என்று எதுவும் இல்லை. நாம் வாழும் வாழ்க்கை எந்த வினாடியிலும் மாறிப்போகலாம். மனிதர்களுக்குள் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு வள்ளுவர் ஒரு அதிகாரமே வகுத்துள்ளார்.
"நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்துஇவ் வுலகு"
என்று உரைக்கிறார்.
கல்வி:
மனிதனிடம் புதைந்து கிடக்கும் ஆற்றல்களையும் திறன்களையும் வெளிக்கொணர்ந்து மலர்ந்த செய்யும் செயலே கல்வி. ஆதலால் எல்லோரும் கல்வி கற்க வேண்டும். கற்கும் நூலை கசடற கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு அதனை நெறியில் நிற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
இக்குறட்பாவில் துணையெழுத்து இல்லை. காரணம் கல்வி கற்றால் யாருடைய துணையும் தேவையில்லை என்பது இக்குறட்பாவில் ஆழ்ந்த கருத்தாகும்.
நாட்டை ஆளுகின்ற மன்னனுக்கு தன் நாட்டில் மட்டும் சிறப்பு. ஆனால் கல்வி கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பை தரும் என்பதனை,
"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை"
என்கிறார் வள்ளுவர்.
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"
என்று கல்வியின் சிறப்பை கூறுகிறார் வள்ளுவர். இளமை, யாக்கை, செல்வம் போன்றவற்றின் நிலையாமையை கூறும் உலகம் கல்வியின் நிலை பற்றி கூறும் போது, ஏழு பிறவிக்கும் பாதுகாப்பாய் வரக்கூடியது கல்வி ஒன்றே எனக் கூறுகிறான்.
ஒழுக்கம்:
ஒழுக்கம் உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்வில் உயர்வு இருக்காது, ஆகையால் எல்லோரும் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்று விரும்பியவர் வள்ளுவர்,
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"
நல்லொழுக்கம் இன்பமே நல்வாழ்விற்கு துணையாகும், தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும் என்பதை,
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்"
இக்குறள் வெளி அறிவுறுத்துகின்றார்.
கடமைகள்:
நல்ல மக்களைப் பெறுவதை விட சிறந்தது வேறு ஒன்றும் இல்லை. காந்தி, அப்துல் கலாம், காமராசர் போன்றவர்களை ஈன்றெடுத்த அன்னை யாரை நாம் நினைத்துப் பார்க்கிறோம்.
"தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"
தம் மக்களை நல்ல பண்புகள் ஆக உயர்த்தி, உத்தமனாக நல்லறிவு உடையவனாக முன்னேற்ற வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கு உடையது.
சான்றோரின் சிறப்பு:
ஒரு சான்றோருக்கு அமைய வேண்டிய 5 முக்கிய குணங்களாக,
"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்"
என்பனவற்றை திருவள்ளுவர் சுட்டுகின்றர்.
மேற்கூறப்பட்ட ஐந்து குணங்களும் ஐந்து தூண்களாக போன்று அமைந்து சான்றோன் அடையாளம் காட்டும் பண்புகளாக அமைகின்றன.
அறத்தின் சிறப்பு:
தர்மம் தலைகாக்கும் என்கிறோம். அறம் செய்ய வேண்டும் என்போம். திருவள்ளுவரின்,
"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"
என்னும் குறள், பொறாமை பேராசை கோபம் கொடிய சொல் ஆகிய நான்கையும் தவிர்த்து யாரும் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. இக்குறள் படி மனிதன் திரும்ப பெற்றுக் கொண்டால் மட்டுமே தர்மம் நிலைத்து நிற்கும், அத்தர்மத்தின் பயன் கிடைக்கும்.
இனிய சொல்:
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று"
வாய்க்கு ருசியைத் தரும் கனியை பறிக்க வேண்டும், அதைத் தவிர ருசியற்ற காயை பறிக்கக் கூடாது. நல்ல இனிமையான சொற்கள் இருக்கும்போது அதைக் கூறாமல் தீய சொற்களை பயன்படுத்துவது அறிவற்ற செயல் என வள்ளுவர் உணர்த்துகிறார்.
ஆண்மகனின் கடமை:
"அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"
இல்லற வாழ்வில் ஈடுபடும் ஒருவன், பழிக்கு அஞ்சி அறம் செய்து உழைத்து குடும்ப பொறுப்பினை பாங்கி நல்லது செய்து வாழ வழி வகுக்க வேண்டும் என கூறுகிறார் வள்ளுவர்.
பெண்களின் சிறப்பு:
பெண்கள் தங்கள் கருப்புக்கு துன்பம் வராமல் தன்னையும் காத்து, தன்னை மணந்து கொண்ட வரையும் பேனி பேசும் சொற்களை எச்சரிக்கையோடு பாதுகாத்து, சோர்வின்றி வாழ வேண்டுமென பொருள்பட,
"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"
என்னும் குறட்பா அமைந்துள்ளது.
கற்புடைய மகளிர் மழை பெய்ய சொன்னால் உடனே மழை பெய்யும் என்பது தமிழர்களின் பண்டு தொட்டே வந்த நம்பிக்கை
"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"
என்னும் குறட்பா மூலம் பெண்ணின் சிறப்பினை கூறுகிறார்.
விருந்தோம்பல்:
வீட்டிற்கு வருகின்ற விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று அவர்கள் மனம் வருந்தாப்படி உபசரிக்க வேண்டும். விருந்தினர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்று உபசரித்தல் அவர்கள் வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் உறைவால் என்கின்றார்,
"அகமனம் மருந்து செய்யுள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்"
விருந்தினர் வீட்டிற்கு வந்தால் அமிர்தமாக இருந்தாலும் அதை அவர்களுக்கு உபசரித்து விட்டு எஞ்சியதை தான் வீட்டிலுள்ளோர் உண்ண வேண்டும் என்றும் கூறுகிறார்.
கடவுள் நம்பிக்கை:
திருவள்ளுவர் கடவுள் ஒருவர் உண்டு என்று நம்புகிறார். ஆனால் கடவுளுக்கு இப்படிதான் வழிபாடுகள் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. கடவுளின் எண்வகை குணங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு அக்கடவுள் பண்புகளை பெற வேண்டுமென்று விரும்புகிறார். மனிதன் தெய்வமாக உயர வேண்டும் என்பதே வள்ளுவரின் விளைவு. உயர்ந்த அறவாழ்வு மேற்கொள்வதன் தெய்வீக வாழ்க்கை வாழ்வதாக கருதப்படுவான், மேலும் மண்ணகத்தை விண்ணகம்ஆக மாற்றுவது வள்ளுவரின் குறிக்கோள். இதனை,
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"
என்னும் குறளில் வெளிப்படுத்துகிறது. திருக்குறளில் உள்ள மிகச்சிறந்த குறட்பாக்களில் இதுவும் ஒன்று.
முடிவுரை:
பண்பாடு,
அறிவுடைமை
நிலையாமை
கல்வி,
ஒழுக்கம்,
கடைமைகள்
சான்றோரின் சிறப்பு,
அரசின் சிறப்பு,
இனிய சொல்,
ஆண்மகனின் கடமை,
பெண்களின் சிறப்பு,
விருந்தோம்பல்
ஆகிய பண்புகளை பின்பற்றி நடந்தால் புகழ் என்னும் இசைவு தானே அவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வந்து சேரும். குடும்பமும் மேன்மை அடையும் என்பது திருவள்ளுவரின் கருத்துக்கரூவுலம் உள்ளத்தின் வெளிப்பாடு ஆகும்.
GOOGLE SEARCH KEYWORDS:
அன்றாட வாழ்வியல் பண்புகள் திருக்குறள், அன்றாட வாழ்வில் திருக்குறள், திருக்குறள் கட்டுரை அன்றாட வாழ்வியல், வாழ்வியல் பண்புகள் திருக்குறள் கட்டுரை, சமூகம் திருக்குறள் கட்டுரை, ஒழுக்கம் திருக்குறள் கட்டுரை, விருந்தோம்பல் திருக்குறள் கட்டுரை, கல்வி திருக்குறள் கட்டுரை, இல்லறம் திருக்குறள் கட்டுரை, இல்வாழ்க்கை திருக்குறள் கட்டுரை, சமுதாயம் சார்ந்த திருக்குறள், சமத்துவம் திருக்குறள்
Everyday life ethics in thirukkural, life is Thirukkural essay, human life ethics thirukkural essay, impact of humanism thirukkural essay, culture thirukkural essay, TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, THIRUKKURAL ESSAY SOCIAL RELEVANCE,
MAINS ESSAY WRITING
🤝
ReplyDeleteThanks nice article
ReplyDeleteSuper
ReplyDelete