முன்னுரை:
வள்ளுவரின் வள்ளுவம், காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களை தந்து இனம்,மதம், நாடு, மொழி என்னும் எல்லையை கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு தேவையான கருத்துக்களை தந்த திருக்குறள், மனித சமுதாயத்தின் வழிகாட்டியாக விளங்குகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த உலகபொதுமறை என போற்றப்படும் திருக்குறள் ஒரு மதச்சார்பற்ற தன்மையுள்ள இலக்கியம் என்பதை நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திருக்குறளின் தனித்தன்மை:
தமிழில் எழுதப்பட்ட திருக்குறளில்,
ஓர் அதிகாரத்தில் கூட, ஒரு குறட்பாவில் கூட 'தமிழ்', 'தமிழர்', 'தமிழ்நாடு' என்ற சொல் இடம் பெறவில்லை.
திரு.வி. கல்யாண சுந்தரம் கூறுவது போல்,
"திருக்குறள் - ஒரு வகுப்பாருக்கு,
ஒரு மதத்தாருக்கும்,
ஒரு நிறத்துக்கும்,
ஒரு மொழியாருக்கோ,
ஒரு நாட்டாருக்கு உரியதன்று. அது உலகுக்குப் பொது"
எனவே வாயுறைவாழ்த்து பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இருந்தும், வள்ளுவரின் வேதம் அம்மொழிகே பெருமை உடையதாக அமைகிறது.
திருக்குறளும் சமயமும்:
உலகிலுள்ள அனைத்து மனிதரையும் ஒரே குடும்பமாக கருதியவர் தெய்வப்புலவர். வள்ளுவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும், அனைத்து சமுதாயத்தினருக்கும் சமயத்தினருக்கும் பொருந்தும் தன்மையுடையது. மேலும், மாதானுபங்கி எந்த மதத்தையும் சார்ந்தவர் ஆகவும் இல்லை என்பதே சிறப்பு.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"
எனும் பொதுநெறி காட்டியவர் செந்நாபோதகர்.
திருக்குறளும் கடவுள் கொள்கையும்:
(கடவுள் = எல்லாம் கடந்தவர்)
'எல்லாம் கடந்தவர்' என்றால் பாசம், பற்று முதலிய அனைத்து நிலைகளையும் கடந்தவர் என்னும் பொருள். இதனை திருக்குறள் 'பற்றற்றார்' எனக் குறிப்பிடுகிறது.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
எனும் குறட்பா படி, யாரை வழிபாடு செய்து வணங்க வேண்டும்? என்று கேட்பவருக்கு, 'பற்று இல்லாதவர்களை' வணங்குக என்று நான்முகனார் வழிகாட்டுகிறார்.
எனவே உலகிலுள்ள பற்றுலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு ஒரே வழி, எந்த பற்றும் இல்லாதவராகிய ' விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டவன்' சான்றோர் ஆன இறைவனை பற்ற வேண்டும் எனக் கூறுகிறார்.
மதமும் மதச்சார்பின்மையும்:
மதசார்பின்மை எனப்படுவது அனைத்து மதத்தையும் மிகுந்த மதிப்புடன் அணுகுவதே. இந்தியாவும் ஒரு மதசார்பற்ற நாடு, காரணம் அனைத்து மதமும் சமம் என்ற நடுநிலைத் தன்மையுடன் இருக்கிறது.
திருக்குறளின் மதசார்பின்மை:
திருக்குறளில் முதல் அதிகாரத்தில், முதல் குறள் கடவுள் வாழ்த்தாக அமைந்திருப்பது,
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவான்
முதற்றே உலகு"
என்ற குறட்பாவில் அகரத்தை அடிப்படையாகக் கொண்ட எழுத்துக்கள் இருக்கும். அதேபோல் இவ்வுலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் என கூறுகிறார் வள்ளுவர்.
(மேலும் இக்குறட்பாவில் ஆதி-இறைவன், பகவன்-கடவுள் என குறிப்பிடுகிறார்)
தெய்வப் புலவர் தனது வாயுறைவாழ்த்து எந்த மதத்தையும் குறிப்பிட்டு குறிப்பிடவில்லை என்பது தனி சிறப்பாகும்.
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"
என்ற குறட்பாவில் இன்ப உலகில் மனிதர்கள் நிலைத்து நிற்க வேண்டுமானால், அன்பரின் அகமாகிய மலரில்வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நிற்க வேண்டும்.
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"
என்னும் குறட்பாவில் விருப்பு வெறுப்புகளை கடந்த கடவுளின் பாதங்களை பொருந்தி நிற்பவருக்கு, எப்போதும் எவ்விடத்திலும் தீங்கில்லை என கூறுகிறார் வள்ளுவர்.
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"
என்னும் குறட்பாவில் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற பயன் என்ன என்பது என எண்ணிப்பார்ப்பது என்ன பயன்.
மேற்கண்ட குறட்பாக்கள் மூலம் முதற்பாவலர், எந்த மதமும் சமயமும் சார்ந்த கடவுளையும் திருக்குறள் மூலம் முன் நிறுத்தவில்லை என்பதை அறியமுடிகிறது.மேலும் கடவுளை, பகவன், ஆதி, வேண்டுதல் வேண்டாமை இலான், வாலறிவன், மலர்மிசை ஏகினான் எனும் பொதுத் தன்மையுடன் குறிப்பிடுவதை நாம் அறியமுடிகிறது.
சமயம் கடந்த மனித மனம் சார்ந்த நூல்:
அறம் குறித்து பேசும் தெய்வப் புலவர். அது சமயத்தை சார்ந்தோ, புறத்தை சார்ந்தோ இல்லை எனவும் அது மனித மனம் சார்ந்தது எனக் கூறுகிறார்.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அதன்
ஆகுல நீர பிற"
எனும் குறட்பாவில் மனதளவில் குற்றமற்றவராக இருப்பதே அறம், மற்றவை எல்லாம் ஆராவரமே என்கிறார்.
சமயம் தன் கட்டமைப்பும் மூலமாக ஏற்றத்தாழ்வு உடைய சாதிமுறையை கொண்டிருக்கும் போது,
"பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"
என்னும் பொது நெறியை அறிவுறுத்தியவர் வள்ளுவர்.
மனிதனும் இறைவனும் திருக்குறளின் பெறுகின்ற இடம் யாது என்பதை புரிந்து கொள்ள கீழ்காணும் குறட்பாவை நோக்கலாம்,
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"
உலகத்தை படைத்தவன் உலகில் ஏற்றத்தாழ்வுடன் சிலர் இரந்தும் உயிர் வாழுமாறு அவன் ஏற்பட்டிருந்தால், இறைவனும் இரப்பவரைப்போல் எங்கும் அலைந்து கெடுவான் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
கடவுள் நம்பிக்கை உடையவராக வள்ளுவர் அறியப்பட்டாலும், அதேபோல் மனிதனை முன்னிலைப்படுத்தும் தன்மையே வள்ளுவத்தின் சிறப்பாகும்.
முடிவுரை:
125க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வள்ளுவரின் வாயுறை வாழ்த்து, ஒரு சமய சார்பற்ற தன்மையுள்ள இலக்கியம் என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களாகும். இக்கட்டுரையின் மூலம் கடவுளின் பொதுப்பெயர்கள், குறட்பாவின் அகம் சார்ந்த கருத்துக்கள், கடவுட் கொள்கைகள், மதசார்பின்மை கூறுகள், அறம் கூறும் குறட்பாக்கள், பொது நெறி பண்புகள், மதக் கருத்துக்களுக்கு மாறான சிந்தனைகள், மதத்தை கடந்து மனிதனை முன்னிலைப்படுத்தும் குறட்பாக்களை வள்ளுவத்தில் அறிய முடிகிறது. மேற்கண்ட கருத்துக்களை ஒன்றிணைத்து நோக்கும் போது தமிழரின் ஆகச்சிறந்த இலக்கிய பெட்டகமாக திருக்குறள், ஒரு மதச்சார்பற்ற தன்மை உள்ள இலக்கியம் என்பதை உறுதியாகிறது எனலாம்.
Google search keywords:
மதச்சார்பற்ற தன்மையுள்ள இலக்கியம் ,
திருக்குறள் சமயசார்பற்ற இலக்கயம் ,
திருக்குறளில் மதச்சார்பின்மை ,
அன்றாட வாழ்வில் திருக்குறள் ,
திருக்குறள் கட்டுரை ,
TNPSC GROUP 2 MAINS THIRUKKURAL ESSAY ,
அன்றாட வாழ்வியலோடு தொடர்பு தன்மை திருக்குறள் , திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் , திருக்குறளில் தத்துவ கோட்பாடுகள் ,
Thirukkural significance of secular literature,
Thirukkural secular literature ,
Thirukkural relevance to everyday life ,
Philosophical content in thirukkural ,
Thirukkural and secularism ,
TNPSC thirukkural essays
No comments:
Post a Comment