முன்னுரை :
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்கக் கூடியது நீர். மனித வாழ்விற்கு மிக முக்கிய தேவையான நீரை திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் நீரை தேக்கி வைத்து பயன்படுத்துவதற்கான இடத்தினை, மக்கள் அமைத்து வாழ்ந்துள்ளனர். மானுட பயன்பாட்டிற்கு பயன் தரும் நீர் உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும், உணவு தேவைக்கும்
அத்தியாவசியமான ஒன்றாக அமைகின்றது. அது உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கு மூல காரணியாக அமையும் திறத்தினை கருதியே
வள்ளுவப் பெருந்தகை நீரினை முதன்மைப் பொருளாக எண்ணி 'நீர் இல்லாமல் இந்த உலகம் மற்றும் மனித வாழ்க்கையே இருக்காது' என்று பதிவு செய்துள்ளார். உலக பொதுமறையாக விளங்கக்கூடிய வள்ளுவத்தில் நீரினை
இன்முழுமையாகவும் முதன்மையாகவும் உரைக்கப்பெற்றதை எடுத்தியம்புவததாக இக்கட்டுரை
அமைக்கப்பட்டுள்ளது.
உலகப்பொதுமறையில் நீர்:
வள்ளுவர் உலகம் நீரில்லாமல் அமையாது என்னும் கருத்தினை வலியுறுத்துகின்றார். திருக்குறளில் நீரினை வான்நீர், நில நீர் என்று இரு பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளார். வான்நீர் என்னும் பொழுது மழைநீரையும், நிலநீர் என்று சொல்லும்போது கடல் நீர், ஊருணி நீர், ஊற்று நீர் ஆகிய நிலைகளில் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.
மழை:
வள்ளுவர் மழையினை அமிழ்து என்று வர்ணித்துள்ளார். உலக உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு மழை அடிப்படை என்பதால் மழையையே அமிழ்து என்று போற்றுகின்றார்.
" தெய்வம் தொழாஅர் கொழுநற் றொழுவாள்
பெய்யெனப் பொய்யும் மழை"
" முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்"
என்ற குறள்களின் வாயிலாக மழை கற்புக்கு நிகராக வைத்துப் போற்றப்படுகிறது. பருவமழை பொய்த்து மக்களைத் துன்பத்திலிருந்து பாதுகாப்பது சரியாக செயல்படும் வகையில், மக்களை காக்கும் அரசன் நெறிமுறை தவறி கொடுங்கோலாட்சி நிறுத்தும் பொழுது மழையும் மக்களை துன்பத்தில் ஆழ்த்தும். மலையானது கற்பிற்கும், அரசனுக்கும் உவமையாகக் கூறப் பட்டுள்ள பண்பினை அறிய முடிகிறது.
மேலும்
"துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை"
என்று குறளின் வாயிலாக உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உணவினை விளைவிக்க பயன்படுவது மட்டுமின்றி, தானும் உணவாக மாறும் தன்மை நீருக்கு மட்டுமே உண்டானதாகும். மழையினால் விவசாயம் பெருகும், உணவு உற்பத்தியும் அதிகரிக்கும், நீரின் அனைத்து விதமான செயல்பாட்டிற்கும் பயன்படும் மேன்மையை அறிந்து கொள்ள முடிகிறது.
நீர் மேலாண்மை விளக்கம்:
நீர் மேலாண்மை என்று சொல்கின்றபோது நீர்நிலைகளை அமைத்தல், மழை நீரைச் சேகரித்தால், நிலத்தடி நீரை அதிக படுத்தல், தடுப்பு அணைகள் அமைத்தல், ஒவ்வொரு சொட்டு நீரையும் முறையாக பயன்படுத்தல், நீர்த்தேக்கங்களை சரியான அளவில் அமைத்தல் போன்ற பல கூறுகளை உள்ளடக்கியதாகும். மக்கள் தங்களது ஒவ்வொரு செயலிலும் நீரினை பாதுகாத்து பயன்படுத்திய முறையையே வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
கடல் :
வானில் இருந்து மண்ணிற்கு வரும் மழைநீர் மண்ணில் பல்வேறு தன்மைகளுக்கு சூழலுக்கு உட்பட்டு அதன் நிலையை அடைகிறது. அவற்றுள் சூரியன் வெப்பத்தால் ஆவி யாவதும், காற்றினால் நீராவியாக குறைந்திருப்பதாக நிலவி இருப்பதும், நிலமும் நீரும் ஒன்றாகிப்போவதும், நிலத்திற்கும் நீருக்கும் உள்ள தன்மைகளால் ஏற்படுவனவாகும்.
இதனை,
"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு"
என்னும் குறளின் வாயிலாக அறியமுடிகிறது.
இவ்வுலகில் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது மூன்றில் ஒரு பங்காக அமைந்திருக்கும் நிலப்பரப்பை மக்கள் வாழ்விடமாக அமைந்துள்ளது. இவ்வுலகம் கடலால் சூழப்பட்ட தன்மையை நம் முன்னோர்கள் மிகச் சிறப்பாக அறிவித்துள்ளனர் அறிவித்துள்ளனர். இதனை,
"பிறவாழி நீந்தல் அரிது..."
"பிறவிப் பெருங்கடல்..."
"விரிநீர் வியனுலகத்து...."
"நெடுங்கடலும் தன்நீர்மை...."
என்ற அடிகளின் வாயிலாக அறிய முடிகிறது.
ஊருனி:
மலையில் வந்த நீரை குளம், வெகு காலத்துக்கு வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு உதவும். நீரில் வெயிலில் உலர்ந்து போகாமல் குளத்தில் தேங்கி நின்று மக்களின் தாகத்தை போக்கும் நிலையில் காணப்பட்டது. ஆண்டு முழுவதும் கூட பயன்படுத்த ஏதுவாக அமையும் இதனை
"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"
என்ற குறளின் வாயிலாக அறிய முடிகிறது.
"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்"
என்ற குறளின் வாயிலாக மணிபோல் தெளிந்த நீர் நிலைகளை உடைய அகழியும், வெளி நிலமும், மலையும், அணிகளும் போன்ற அழகிய நிழல் தரும் காடுகளையும் உடையதே சிறந்த அரணாகும். இப்படிப்பட்ட இயற்கையான அரண்களை உடைய நாடே பாதுகாப்பானதாகும். காடும், நீர்நிலைகளும் வாழ்ந்தால் நாடு செழிக்கும் என்பதே நிதர்சனம்.
ஊற்று:
பூமிக்கு அடியில் காணப்படக்கூடிய நீர் வெளி பெயர்வதாகும். நிலத்தின் அடியிலிருந்து நீரை ஊற்று, நீர் வற்றாது மக்களுக்கு பயன்பட தரக்கூடியது ஆகும். இதனை,
"மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்"
என்ற குறளின் வாயிலாக ஊற்றுநீர் பெருக்கத்தை அறியமுடிகிறது.
நீரின் முதன்மை:
"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு"
இந்த உலகில் முதன்மையானது ஆக நீரினை வரையறுத்து இருக்கிறார் வள்ளுவர். நீர் மட்டும் இல்லையெனில் இந்த உலகில் எந்த உயிர்களும் வாழ முடியாது என்று நீரின் முதன்மையை கூறுகிறார்.
நீரும் அமிழ்தும்:
உலக உயிர்கள் யாவும் வாழ்வதற்கு மழை இன்றி அமையாதது ஆகையால் மழையே அமிர்தம் எனப் போற்றுகிறார்.
"வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று"
என்ற குறளின் வாயிலாக மழைப் பருவம் தவறாமல் செய்தால் மட்டும் உலக உயிர்கள் எவ்வித இடர்பாடுகள் இன்றி வாழ முடியும். பருவம் தவறாமல் பெய்யும் மழையை அமிர்தமாக கூறுகின்றார்.
நீர் துளியின் சிறப்பு:
விண்ணுலகில் உள்ள மழைநீர் மண்ணை தொட வில்லை எனில் ஒரு சிறு புல் கூட வளராது என்பதனை,
"விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது"
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்"
என்ற தொடரின் வாயிலாக மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதன் இடத்தில் பொய்யாவில்லை எனில் பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். மழை நீர் துளி மண்ணைத் தொட வில்லை எனில் மண்ணில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதிப்படையும் சூழலினை அறிய முடிகிறது.
நீர் மேலாண்மையின்மையின் துன்பம்:
உலகில் நீர் வளம் பெருகி தான் முதன்மையானது மழை மழை பொழிவது குறைந்தால் நாட்டின் வேளாண் தொழில் நடைபெறாது அத்தகைய நிலையில் மக்கள் உணவின்றி பசிக் கொடுமையை அனுபவித்து வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்பதனை
" விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி"
"கொடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை"
என்ற குறளின் வாயிலாக அறியமுடிகிறது நீரானது மழையாக பொது மக்களை வாழவைக்கும் மழை பெய்யாத காலங்களில் மக்களின் வாழ்நிலை கொலை செய்வதுமான நிகழ்வினை ஏற்படுத்தியது.
மேலும்,
"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு"
மக்கள் மழை இன்றி பசி துன்பத்துடன் காணப்படுகின்ற வேலையில் அவர்களுக்கான விழா எடுத்து மகிழ்ச்சியாக வாழும் நிலையும் இராது.
"தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்"
மழை பொய்யாது மக்கள் துன்பத்தில் வாடும் நேரத்தில் தானம், தவம்இரண்டும் அறச்செயல்கள் செய்து வாழும் பண்புகள் இன்றி மக்கள் வாழும் நிலை ஏற்படும்.
முடிவுரை:
மக்கள் வாழ்வில் நீர் இன்றிஅமையாத ஒரு மூலப் பொருளாகும். நீரினை மக்கள் பெறக்கூடிய வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்மையானதாக திகழக்கூடிய நீரின் பயன்பாடு நிலை குறித்தும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. நீரினை மக்கள் மேலாண்மைக்கு பயன்படுத்தி வாழ்ந்த நிலையில் விளக்கப்பட்டுள்ளது. நீரினால் ஏற்படும் துன்ப நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற காலகட்டத்தில் நீர்நிலைகளும் தங்களது புனிதத்தை இழந்து மாசுபட்டு சீரழியும் நிலைக்குள்ளாகி இருக்கிறது.
Google search keywords:
Water management in Thirukkural, water management essay, essay about water management, Thirukkural water management essay, Thiruvalluvar about water management, water management Thiruvalluvar, everyday life in Thirukkural, social relevance Thirukkural, Thirukkural essay social Relevance,
திருக்குறளில் நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு திருக்குறள், மழைநீர் திருக்குறள், நீர் மேலாண்மை கட்டுரை, திருக்குறள் கட்டுரை நீர் பாதுகாப்பு, மழை நீர் பாதுகாப்பு திருக்குறள் கட்டுரை, அன்றாட வாழ்வில் திருக்குறள் கட்டுரை, மானுட தாக்கம் திருக்குறள் கட்டுரை, அரசியல் பொருளாதாரம் சமூகம் சார்ந்த கட்டுரை, அன்றாட வாழ்வியல்
For you thumbnails, try this tamil thumbnail amker https://play.google.com/store/apps/details?id=com.thumbnailmaker.tamilpostermaker&hl=en
ReplyDelete