THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Sunday, June 27, 2021

" திருக்குறளில் உழவு " AGRICULTURE IN THIRUKURAL


 

முன்னுரை:

          உலக மொழிகளில் முதன்மையாக மொழி தமிழ் மொழியாகும். தமிழ்மொழி மிகத் தொன்மையான மொழி என்பர். இத்தொன்மையான மொழி இலக்கணம், இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சிறப்புடன் பெற்றுள்ளது. இவற்றுள் பல்வேறு அறிஞர்கள் பன்முக நோக்கில் ஆராயப்படும் திருக்குறளும் ஒன்றாகும். மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று உணவு. உணவிற்கு அடிப்படையானது உழவுத்தொழில். ஆகையால் உழவர்கள் பற்றியும், உழவுத் தொழில் பற்றியும் இக்கட்டுரையில் நாம் காண்போம்.


உழவர்:

           உலகிலேயே மிகச் சிறந்ததாக மரம் கருதப்படுகிறது அறத்தை முதன்மையாக வைத்து அவ்வையார் ஆத்திசூடி அறம் செய்ய விரும்பு என்ற பாடல் வரிகள் மூலம் மனிதனின் அரசியலை செய்ய விரும்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை.

      "கணவாய் இரப்பார்க்கொன்று அவர் கரவாதும்

       கைசெய்தூண் மாலை யவர்"

என்ற குறட்பா மூலம் உழவுத் தொழில் செய்யும் உழவர்கள் தம் கையால் உழுது அதன் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களை மற்றவர்களுக்கு உதவுவார்கள். மற்றவர்களிடமிருந்து பொருள் எதுவும் கேட்கவா கேட்டு வாங்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய தொழிலை நேர்மையாகவும் அறத்தோடு உழைப்பார்கள். இவர்கள் தாமாகவே உணவை உற்பத்தி செய்வதால் யாரிடமும் கையேந்தி நிலை ஏற்படாது என நம்பிக்கையாக இருப்பார்கள்.


உழுவும் பயிரின் செழிப்பும்:

           உழவு என்பது மாட்டின் மீது கலப்பையை வைத்து மண்ணை ஒரே சீராக தோண்டிவிட வேண்டும். பயிர் வளர்வதற்கு உரத்தை பயன்படுத்துவார்கள். உரம் என்பது ஆடு, மாடு கழிவுகள் மற்றும் பின் இலைகள், செடிகள், தட்டைகள் போன்றவற்றை அடிப்படையாக நிலத்தின் மீது போட்டு உழுவுவர்கள். பின் சில நாட்களுக்கு காய விட வேண்டும் அப்படியே காய விட்டு நிலத்தில் விளையும் பயிர்கள் செழித்து வளரும் என்பதை,

            "தொடிப்புழுதி கஃசா உரத்தின் பிடிதோரும்

              வேண்டாது சாலச் படும்"

என்று குறட்பா மூலம் அறியப்படுகிறது.


விதையும் வளர்ச்சி நிலையம்:

          உழவுத் தொழிலில் அதிக விளைச்சலை அடைவதற்கு விதை முக்கிய காரணமாகும். விதை தரமானதாக இருந்தால் மட்டுமே பயிர்கள் நன்கு விளையும். அதுபோல பருவ காலத்தில் விதைத்தால் மட்டுமே பயிர்கள் செழிப்பாக வளர்ச்சி அடையும் 'பருவத்தே பயிர் செய்', 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கு ஏற்ற வாறு புலவர்களும் இயற்கை சூழலோடு வாழ்கின்றனர் இதனை வள்ளுவர்,

          "பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

            தீராமை ஆர்க்கும் கயிறு"

என்ற குறட்பா மூலம் அறிய முடிகிறது. காலத்திற்கு ஏற்றவாறு விதைப்பதால் செல்லும் அதிகரிக்கும் என்றும கூறுகின்றன.


உழவின் சிறப்பு:

          உழவுத் தொழிலில் இருக்கும் ஒவ்வொரு வேலையும் மிகக் கடினமாக இருக்கும். வேளாண்மைத் தொழிலில் உழவர்கள் கடுமையான மழையாக இருந்தாலும், வெப்பமாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு கடுமையாக உழைப்பார்கள் உள்ளவர்கள். உடல் வலியை போக்குவதற்கு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி தான் தன் உடல் வலியைப் போக்கிக் கொள்வார்கள். உழவுத் தொழிலில் உள்ளவர்களுக்கு கடினமாக இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையாக வைத்து சிறப்பிப்பர். இதனை,

          " சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்

             உழந்தும் உழவே தலை".


உழுவும் நாட்டு வளர்ச்சியும்:

           உழவர்களின் உற்பத்தியால் மட்டுமே நாடு நல்லதொரு வளர்ச்சியை அடைய முடியும் என்பர். உணவு, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை ஆகும். உணவு உற்பத்தி செய்யவில்லை என்றால் நாட்டின் வளர்ச்சி குன்றிவிடும். உணவு உற்பத்தி பெருகினால் சிறப்பான உழவர் பெருமக்களை கொண்ட நாடு பல சிறப்பு ஆளுகையின் கீழ் உள்ள நாடுகளிலும் தம்முடைய மன்னரின் ஆட்சியின் கீழ் காண்பார் என்பதை 

வள்ளுவர்,

         " பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

           அலகுடை நீழ லவர்"

என்ற குறட்பா மூலம் அறிய முடிகிறது.


உழவின் மகிமை:

           உழவுத் தொழில் புரியும்உழுவர்கள் தன்னுடைய தொழிலை விட்டு விட்டால் நாடும் மனிதர்களும் மிகப்பெரிய வேதனையும் இழப்பையும் எதிர்கொள்வார்கள். உழவுத் தொழில் செய்யாமல் இருப்பதால் பந்த பாசங்களையும் எல்லாம் விட்டுவிட்டு வாழ்கின்ற துறவிகளுக்கு கூட இல்லாமல் போய்விடும் என்பதை,

          " உழவினர் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

           விட்டேன் என பார்க்கும் நிலை"

என்ற குறட்பாவின் மூலம் அறியமுடிகிறது.. தொழிலில் மிக சிறப்பான தொழில் உழவு தொழில் ஆகும். உழவுத் தொழிலல் செய்யவில்லை என்றால் மிகவும் துன்பம் நேரிடலாம். உழவுத் தொழிலே மகிமையான தொழிலாகும்.


நிலம் கவனிக்கப்படாததால் வரும் விளைவு:

          உழவர்கள் நிலத்தைக் கவனிக்காவிட்டாலும் பராமரிக்காவிட்டாலும் அந்நிலத்தின் பயிர்கள் விளையாது. கவனிக்கப்படாத மனைவி போல அவனை வெறுத்து கோபம் கொள்ளும் அவனது அதாவது பயிறு விளையாது. இதனை,

          "செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

             இல்லாளின் ஊடி விடும்"

என்ற குறட்பா மூலம் நிலத்தை கவனிக்கப்படாமல் விட்டால் ஏற்படும் செய்தியினை பற்றி அறிய முடிகிறது.


முடிவுரை:

               இயற்கை அளிக்கக்கூடிய கோடையை பயன்படுத்தி இயற்கையோடு இணைந்து செயல்படுவது வேளாண்மை. வேளாண்மை செய்யக்கூடியவர்கள் கடுமையான உழைப்பு மனஉறுதியோடு வேளாண்மை மேற்கொள்வர். உழவர்கள் தன்னம்பிக்கையோடு தங்களுடைய உழைப்பு நல்லவர்கள். பல்வேறு சூழல்களில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டு சமுதாயத்தை மேம்பாடு அடையச் செய்வதில் முதன்மையானவர்கள். இவர்களில் திறமையால் தன் நாடு அடையும் வளர்ச்சியும், வீழ்ச்சியும் அடங்கியுள்ளதைத் திருவள்ளுவர் தம் குறளில் கூறியுள்ளதை இங்கே எடுத்துரைக்கப்பட்டது.




Google search keywords:

Agriculture in Thirukkural, farmer farming in Thirukkural, Thirukkural essay agriculture , cultivation thirukkural, economic in Thirukkural, everyday life in Thirukkural,. Relevance to social political economic affairs 

திருக்குறளில் உழவு, திருக்குறளில் விவசாயம், உழவர்கள் திருக்குறள், TNPSC GROUP2 MAINS , திருக்குறள் கட்டுரை, அன்றாட வாழ்வியல், மானுட தாக்கம்





3 comments: