THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Monday, June 28, 2021

திருக்குறளில் அடிப்படை உரிமையும் கடமையும் [FUNDAMENTAL RIGHTS & DUTIES IN THIRUKKURAL]

 




முன்னுரை:

     இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்னென்ன, கடமைகள் எவை எவை என்பனவற்றைச் கோடிட்டுக் காட்டுகிறது. அதில் ஒவ்வொரு சரத்திருக்கும், மூலம் வள்ளுவத்தில் காணப்படுகிறது. 

ஆம் சட்டத்திற்கு முன் ஆணும் பெண்ணும் சம உரிமை இதனை வள்ளுவர்,

"பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

 புத்தேளிர் வாழும் உலகு"

சரி சமமாக உரிமை பெற்று வாழ விரும்பிய என்ற மனைவி செய்யும் கடமை இதுவென காட்டுகிறார் வள்ளுவர்.


பெற்றோரின் கடமை, மகனின் கடமை:

      "ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே" எனப் புறநாநூறு, பெற்றோரின் கடமை வலியுறுத்துவது. ஆது போன்று

     " ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

       சான்றோன் எனக்கேட்ட தாய்" 

என பெற்றோரின் கடமையை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.


     மகனின் கடமை என்னென்ன அவர்களின் உரிமைகள் என்னென்ன என தொடங்கி வள்ளுவர் முதலில்,

     " மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

       என்நோற்றான் கொல்எனும் சொல்"

 என அவனின் முதல் கடமையை, தன் தந்தைக்கு நல்லதொரு பெயரை பெற்றுத் தருதல் என காட்டுகின்றார்.


உரிமையும் கடமையும்:

     திருக்குறளில் அடிப்படை கடைமையும் அடிப்படை உரிமையும் வகைப்படுத்துதல் காணும்போது திருவள்ளுவர் தமக்கு பெரும் வியப்பை தருகிறார். அதாவது அடிப்படை உரிமைகள், கடமைகள் மட்டுமில்லாமல்

" உரிமையோடு கூடிய கடமையும், கடமையையோடு கூடிய உரிமையும்" சுட்டிக்காட்டுகிறார்.

 1. உரிமையோடு கூடிய கடமை:

குறள் 36 - " அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க ..."

குறள் 122 - " காக்க பொருளா அடக்கத்தை..."

குறள் 127 - " யாகாவாராயினும் நாகாக்க..."

குறள் 200 - " சொல்லுக சொல்லிற் பயனுடைய..."

குரல் 434 - " குற்றமே காக்க பொருளாகக்..."

குறள் 236 - " தோன்றின் புகழோடு தோன்றுக..."

குரல் 305 - "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க..."

குறள் 391 - " கற்க கசடற கற்பவை..."

குரல் 725 - " ஆற்றின் அளவறிந்து கற்க..."

குறள் 414 - " எனைத்தானும் நல்லவை கேட்க..."

குரல் 664 - " திறனறிந்து சொல்லுக சொல்லை.."

குறள் 211 - " அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக..."

குரல் 467 - " எண்ணித் துணிக கருமம்..."

குரல் 800 - " மறவற்க மாசற்றார் கேண்மை..."

குரல் 261 - *வலியார்க்கு மாறேற்ல் ஓம்புக..."


2. கடமையோடு கூடிய உரிமைகள்:


குறள் 204 - " மறந்தும் பிறன்கேடு சூழற்க..."

குறள் 509 - " தேறற்க எவரையும் தேராது..."

குறள் 656 - " செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை..."

குறள் 439 - "நயவற்க நன்றி பயவா வினை..."

குறள் 827 - "சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க..."

குறள் 800 - " மருவுக மாசற்றார் கேண்மை..."

குரல் 672 - " தூங்குக தூங்கிச் செயற்பால..."

குரல் 88 - " பிரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்..."

குறள் 656 - " செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை..."

குறள் 872 - " கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.."

குறள் 439 - " நயவற்க நன்றி பயவா வினை..."


     சட்டமேதை 'சால்மண்ட்' இன் புத்தகமான "bundle of rights and duties",

 இப்புத்தகத்தில் 

தந்தையின் கடன், 

மகனின் கடன்,

வாழ்க்கைத் துணைவியின் கடன், 

உழைப்பவனின் கடன்,

ஒற்றனின் கடன், 

உயர்ந்தோரின் கடன் 

என்று இப்படி பல கடன்களை வள்ளுவத்தின் படியே குறிப்பிட்டுள்ளார். "நல்லவை செய்வதெல்லாம் உன் கடமையை" அதாவது வள்ளுவரின் கருத்துக்களை தனது புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.


நல்லவை செய்வதும் தன் கடமையை:

   எல்லோருடைய கடனும் 'நல்லவை செய்வதற்காக' இருக்கட்டும் என்று ஒரு வரியில் சொன்ன சட்டமேதை சால்மண்ட் இதற்கு வள்ளுவர் அக்காலத்திலே நல்லவைகள் எவை என பட்டியலிட்டுள்ளார் வள்ளுவர்,

குறள் 34 - " மனத்துக்கண் மாசிலன்..."

குறள் 49 - " அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை..."

குறள் 72 - " அன்பின் வழியது உயர்நிலை.."

குறள் 108 - " நன்றி மறப்பது நன்றன்று.."

குறள் 133 - " ஒழுக்கம் உடைமை குடிமை..."

குறள் 136 - "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை..."

குறள் 221 - "வறியவர்க்கு ஒன்று ஈவதே..."

குறள் 241 - "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்..."

குறள் 36 - "ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்..."

குரல் 350 - " பற்றுக பற்றற்றான் பற்றினை..."

குறள் 323 - " ஒன்றாக நல்லது கொல்லாமை..."

குறள் 421 - " அறிவற்றங் காக்கும் கருவி.."

குரல் 400 -  " கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவனுக்கு..."

குரல் 335 - " மெய்ப்பொருள் காண்பது அறிவு..."

குறள் 997 - " பண்புடையார் பட்டுண்டு..."

குரல் 960 - " நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்.."

குறள் 131 - " ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.."

குரல் 637 - "உலகத்து இயற்கை அறிந்து செயல்..."


என்று இப்படியாக பல நல்ல கடன்களை இன்னும் பலபல அடுக்கிக்கொண்டே செல்கின்றார் பொய்யாமொழிப் புலவர் மாதானுபங்கி.

மேலும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ஐ தலையாய அறமாக இயம்புகிறார் அறம் பொருள் இன்பத்தை அறவழியில் பொதிகைக்கு அடைக என்று கடுமையாக வலியுறுத்துகிறார்.


முடியுரை:


     உரிமைகள் மீறப்படும்போது நீதிமன்றங்களின் உதவியை நாடுகின்றது எனவேதான் பிறகு உரிமைகளை மதித்து அவர் அவர்களுக்கும் கொடுப்பது சிறப்பு என வள்ளுவர் மொழிகிறார் , இதனை

"தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்" (குறள் 111)


இவ்வாறு திருக்குறள் மீதான ஆர்வம் ஏற்பட்டு தால்சுதாய், சால்மன்ட் என பல மேற்கத்திய அறிஞர்கள் ஆய்வாளர்கள் திருக்குறள் மீதான ஆர்வம் வெளிப்படுத்துகின்றன. இந்தியாவில் காந்தியின் திருக்குறள் மீதான ஆர்வம் குறிப்பிடப்பட்டது.  இக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் ஆணையத்தின் 30 சரத்துக்கள் பெரும்பாலானவற்றை திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டு உள்ளார் என்பதை கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.







Google Search Keywords:

திருக்குறளில் அடிப்படை உரிமையும் கடமையும், அடிப்படை உரிமை கடமை, திருக்குறளில் உரிமையும் கடமையும், TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, 

சமத்துவம், அரசியல், அரசு, அரசன், ஆட்சிமுறை, அன்றாட வாழ்வில் திருக்குறள், அரசியலில் திருக்குறள், திருக்குறள் கூறும் மனித உரிமைகள், fundamental rights, fundamental duties, Thirukkural rights and duties, Thirukkural rights duties

3 comments: