முன்னுரை :
'திரைகடல் ஓடி திரவியம் தேடு' என்பது அவ்வை வாக்கு. இத்தகைய பழமொழிகள் ஒவ்வொன்றும் பழமையான மொழிகள் மட்டுமன்று அதை ஒவ்வொன்றும் அனுபவ மொழிகள். வாழ்க்கை அனுபவங்கள் ஆனது, அனுபவங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப் படுத்துகின்றன. பொருள் நிறைந்ததாக மாற்றுகின்றன.
பொருள் என்றவுடன்,
"வாழ்வதற்கு பொருள் வேண்டும், நாம்
வாழ்வதிலும் பொருள் வேண்டும்"
என்று படித்த வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது பொருளியல் சிந்தனைகள் குறித்து செந்நாபோதகர் கூறும் கருத்துக்களை இக்கட்டுரையின் வாயிலாக காண்போம்.
பொருள் பற்றி திருவள்ளுவர் கூற்று:
"அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்"
இக்குறட்பாவில் தீயவழிகளில் பொருள் ஈட்டாமல் அதை முறையாக திறனறிந்து பொருளீட்டுதல் அறத்தையும் இன்பத்தையும் தரவல்லது என வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
பொருளியல் தோற்றம்:
கிரேக்க சொல்"Eco" என்ற அடிச் சொல்லிலிருந்து "ECONOMICS" என்ற சொல் உருவானது. இச்சொல்லுக்கு "குடும்ப நிர்வாகம்" என்று பொருள். கிரேக்க சொல்லும் திருவள்ளுவர் பொருள் பற்றி குறிப்பிடும் சொல்லும் ஒன்றாகவே காணப்படுகிறது
அதாவது தலைவியின் பொருள்ஆட்சியில் தன் இல்லறமே சிறந்து விளங்கும். இதனை நம்நாட்டில் "நாட்டுக்கு அரசன்", "வீட்டுக்கு மனைவி" என்ற பழமொழி இதனை விளக்கும்.
மழைதான் பொருளாதார வாழ்வில் அடிப்படை:
வாழ்வின் அடிப்படைகளை அறிந்தவர் வள்ளுவர். அவர் மழையை வாழ்வின் பெரும் ஆதாரமாக கருதுகின்றார். மழைதான் உணவு தருகிறது. மழைதான் பொருளாதார வாழ்வில் அடிப்படை உருவாக்குவதாக நம்பினார். வாழ்வின் அடிப்படை பொருளாதார தேவையான வேளாண்மை மழையைச் சார்ந்திருக்கிறது, அறிவையும் தரும், அழிவிலிருந்து மீண்டு தழைத்தோங்கவும் செய்யும்.
வேளாண்மை:
உலகத்தின் அச்சாணியாக வேளாண்மை இருக்கிறது. பொருளாதார ரீதியாக பிற துறைகளின் செழுமை, வேளாண்மை துறையின் செழுமையை சார்ந்தது. உழவுத் தொழில் புரிபவன் மட்டுமே தலையாய மனிதன்.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்"
உழவுத் தொழிலே மற்ற தொழில்களை விட உயர்ந்ததாக வள்ளுவர் கருதுகிறார்.
உற்பத்தி காரணிகள்:
"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற"
உற்பத்தி காரணிகளான நிலம், உழைப்பு, முதலிடு, அமைப்பு, காலம், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல கருத்துக்களை வள்ளுவர் எளிமையாக சொல்லியிருக்கிறார்.
[முற்காலத்தில் பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் பொருளியல் கூற்றுக்களை சிந்தனைகளை எடுத்துக் கூறியுள்ளனர்.]
["ஒரு பொருளை பயனை பொருத்து அதன் விலை அமையும்" - தாமசு அகினோசு]
["பொருளாதாரம் என்பது செல்வத்தை பற்றிய அறிவியல்" - ஆடம் ஸ்மித்]
வள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறி:
முதற்பாவலர் தம் முப்பாலிலும் தான் பாடுவதற்கு உரிய பொருளாக மனிதனை எடுத்துக் கொண்டார். உலகில் தோன்றிய மனிதன் சிறப்பாக வாழ்ந்து விண்ணுலக சிறப்பினை இந்த மண்ணுலகில் அடையவேண்டும். நன்னூல் ஆசிரியர் பவணந்தி யாரும், "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே" என்றார்.
செல்வத்தை ஈட்டுதல்:
"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்"
அறவழியில் பழிபாவத்திற்கு அஞ்சி பணம் சேர்த்து அதனை பலருக்கும் பகிர்ந்து அளித்து வாழ்ந்து வந்தாள், ஒருவனுடைய சந்நிதி வாழையடி வாழையாக தொடர்ந்து வளரும். தனக்கு இன்பம், தன்னை சார்ந்தவர்களுக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நலம் உண்டாகும் எனக் கூறுகிறார் வள்ளுவர்.
மேலும்,
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"
என்ற குறளில் வருமானத்தை அடையாளம் காணுதல், அதனை திரட்டுதல், திரட்டிய வருமானத்தை அரசு கருவூலத்தில் பாதுகாத்தல், அவ்வாறு பாதுகாத்து செல்வத்தை மக்களுக்கு முறையாக வழங்குதலும், செய்யவல்லது தான் சிறந்த அரசு என வள்ளுவர் கூறுகிறார்.
பொருளை பகிர்தல்:
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
இக்குறட்பாவில் திருவள்ளுவர் பொருள் பற்றிய தம் அரிய கருத்தினைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். தேடிய பொருளை பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் காப்பாற்ற வாழும் நெறியே சிறந்த நெறியாகும்.
மேலும்,
"சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு"
அதாவது அறம் மக்களுக்கு சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும் எனவே அவர் அதைக் காட்டிலும் நன்மை தருவது வேறில்லை எனக் கூறியுள்ளார்.
வெளிநாட்டு உதவி:
"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு"
பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளரும் நாடு சிறந்த நாடாகும் முயற்சி செய்து தரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடாகும்.
பொதுச் செலவு :
வள்ளுவர் சமநிதிநிலை அறிக்கையை பரிந்துரை செய்கிறார். 'ஒரு நாடு தன் செலவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில் அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை' என்கிறார்.
பொது செலவை கீழ்காணும் மூன்று இனங்களுக்கு செலவிடுமாறு வலியுறுத்துகிறார்:
1.பாதுகாப்பு ,
2. பொதுப்பணிகள் ,
3. சமூகப்பணிகள்.
"எப்போதும் உபரி நிதி நிலை இருக்கட்டும், சில நேரங்களில் சமநிலை இருக்கலாம் ; ஆனாலும் ஒரு போதும் பற்றாக்குறை நிதிநிலை மட்டுமே இருக்கக் கூடாது" என எச்சரிக்கிறார் வள்ளுவர்.
நலம் பேணும் அரசு :
ஒரு நலம் பேணும் அரசியல் வறுமை, எழுத்தறிவின்மை, நோய்கள் மற்றும் பகை போன்றவை இருக்காது என்கிறார்.
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா இல்லாத நாடு"
முடிவுரை:
வாழ்க்கை பொருளால் ஆனது, பொருள் நிறைந்தது. மனித இனக்குழு சமூகமாக வாழ்ந்த போது தன்னிடம் உள்ள பொருளை கொடுத்துவிட்டு, தனக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டான். அந்த பொருளை ஈட்டுவதற்கு மனிதன் திரைக்கடல் ஓடி இருக்கின்றான். இக்கட்டுரையின் வாயிலாக 'மனிதன் வாழ்வதற்கு பொருள் வேண்டும்', 'வாழ்வதிலும் பொருள் வேண்டும்', 'அதற்கு அரசின் உறுதணை அவசியம் வேண்டும்' என்ற சொந்நாபோதகரின் பொருளியல் சிந்தனைகளை உணர முடிகிறது.
GOOGLE SEARCH KEYWORDS:
திருக்குறளில் பொருளியல் சிந்தனைகள்,
திருக்குறளின் பொருளாதாரம் ,
அன்றாட வாழ்வில் திருக்குறள்,
மானுட தாக்கம் திருக்குறள்,
அன்றாட வாழ்வியல், வெளிநாட்டு உதவி, நிலையான பொருளாதாரம், நாடு, அரசன், திருக்குறளில் அரசியல்,
Economical thoughts in thirukkural, thirukkural essay economics ,
Economics in thirukkural, everyday life in thirukkural, social relevance in thirukkural
NICE. KEEP UPLOAD MORE ESSAYS
ReplyDelete2020-2021 India's financial year -7.5% down. But during the financial year rebuild the problem via Thiruvalluvar statistics...so Thirukural teached how economic stables in upcoming life. Thanks for kindly present the article bro.
ReplyDeleteTHANKS FOR READING
DeleteSuperb best essay
ReplyDeleteGood essay
ReplyDeleteexcellent essay. thank you so much, keep continuing .
ReplyDelete