THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Friday, July 9, 2021

திருக்குறளும் ஊழல் எதிர்ப்பும் Anti-corruption in Thirukkural





முன்னுரை:

     மனிதன் நேர்மையில் இருந்து பிறழந்து, தவறு செய்ய முற்படும் போது அவனுக்கு தூண்டுகோலாக இருந்து வலிமை சேர்ப்பது அவனின் நெஞ்சே! 
ஆம், உண்மை நெஞ்சில் இருந்து பிறக்கின்றன, ஆசையே ஊழல் போது அதற்கு துணையாக நிற்கிறது. அதனால் வரும் துன்பங்களை மனிதனுக்கு உறுதி எங்கணும் எச்சரிக்கை செய்கின்றார் திருவள்ளுவர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

     "அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

      வஞ்சிப்பது தோன்றும் அவா". (குறள் 366)




ஊழல் - பொருள் விளக்கம்:

    'ஊழல்' என்ற சொல்லாட்சியை திருக்குறளில் நேரடியாக இடம் பெறவில்லை. ஆனால் 'ஊழ்' என்னும் சொல்லாட்சி உண்டு இச்சொல் முறைமை என்னும் பொருள்படும்.

ஊழ் - நன்மை செய்தால் நற்பயன் விளையும் ; தீமை செய்தால் தீய பயன் விலையும். 

எனவே ஊழ் என்பது தலைவிதி, பழைய வினைப்பயன், முறைமை, நீதி, சகுனம் என பொருள்படுகிறது.

ஊழல் = ஊழ்+அல் , அதாவது முறைசாராத, முறையற்ற, முறைக்கு எதிரான எனவும் பொருள்படுகிறது.

        "ஊழின் பெருவலி யாவுள.." (குறள் 380)


        "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

        தாழாது உஞற்று பவர்" (குறள் 620)



திருக்குறளின் ஊழலை குறிக்கும் சொற்றொடர்கள்:

          சமுதாயத்தில் பல துறைகளில் நிகழும் முறைகேடுகளை அல்லது முறைமை அல்லாதவைகளையே ஊழல் என்கிறோம்.

   இழுக்கா, அறன்‌இழுக்கா, சலத்தால், கொள்ளாமை, அறன்‌அல்ல, அல்லவை செய்யார், நடுவுஇகந்து, பழிபடுவ, தீயவை தீய, பழிக்கும் வினை, பீழைதரும், களவினால், நடுவு இன்றி போன்ற சொற்கள் ஊழலை சுட்டிக்காட்டுகின்றன.


பொருள் நோக்கிலான ஊழல்கள்:

      ஒருவனை முறைசாராத முறையில் பொருளீட்ட ஊக்குவிப்பது அவனுடைய வறுமையும், நிறைவேறாத ஆசையும். ஆதலால் முறை சாராத செயலில் பொருள் ஈட்ட முனைகின்றனர். இதனை மிகவும் வன்மையாக கண்டிக்கிறார் வள்ளுவர்,

     "ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

      சான்றோர் பழிக்கும் வினை"


என்ற குறட்பாவில் வறுமையால் ஏற்படும் ஊழலை உணர்த்துகிறார். தேவையற்ற ஆசைகளால் பல சூழ்நிலைகளில் கையூட்டல் பெறுதல் போன்ற முறைகேடான வழியில் பொருள் ஈட்ட முயல்பவர்கள் சான்றோர் பழிக்கு ஆள்ஆவார்கள் என எச்சரிக்கிறார். (ஈன்ற தாயே பசி கொண்ட போதிலும், சான்றோர் பழிக்கும் வினையை செய்தல் கூடாது)


ஆசையின் காரணமாக எழும் ஊழல்:

      "அழக்கொண்ட எல்லாம் அழப்போம்.." 


     "காலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

      கலந்துள்நீர் பொய்துஇரீஇ யற்று"


என்று வரும் குறட்பாக்களில் பொருள் ஆசையின் காரணமாக எழும் ஊழலினை சுட்டிக்காட்டி உணர்த்துகிறார் வள்ளுவர்.


ஆட்சித்தலைமையும் ஊழல்களும்:

       நாட்டை ஆட்சி செய்யும் தலைவன் நடுநிலை தவறாமல் நேர்மை முறையில் ஆட்சி செலுத்த வேண்டும். அவ்வாறு ஆட்சி புரிபவன், வாழும் குடிமக்களுக்கு, இறைவனுக்கு சரி நிகராக போற்றப்படுவான் என வள்ளுவர் வாழ்த்துகிறார்,

     "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

      இறையென்று வைக்கப் படும்"


என்ற குறட்பா வழி அறிய முடிகிறது. 

 எனவே நாட்டை ஆட்சி செய்யும் தலைவன் தீயவனாக அமர்ந்திவிட்டாள், அவனை சார்ந்த குடிமக்களும் அறம் சாரா முறையில் பொருளீட்ட முனைவர். இதனால் நாடும், நாட்டு மக்களும் அல்லல்படுவர் என்பதனை,

     "அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

      செல்வத்தைத் தேய்க்கும் படை"


என்ற குறளின் வழியில் ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என உணர்த்துகிறார் வள்ளுவர்.


பணியாளர் தேர்வும்:

   

  "காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

    பேதைமை எல்லாந் தரும்"


என்ற குறளின் வழியில், தொழில் அறிவு இல்லாதவரிடம், அவர் மீது கொண்ட நட்பின் காரணமாக ஒரு தொழிலை ஒப்படைப்பது அறியாமையே. அவ்வாறு ஒப்படைப்பது துன்பங்களை எதிர்காலத்தில் கொடுக்கும் என வலியுறுத்துகிறார். எனவே திறமைக்கு முதலிடம் தந்து, தொழில் அறிவு உள்ள பணியாளர்களை தேர்வு செய்தல் வேண்டும். இதனை,

     "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

    தீரா இடும்பை தரும்" என்றும்


     "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

      அதனை அவன்கண் விடல்"

என்ற குறட்பா மூலம் அவரவர் துறைக்கு ஏற்ப பணியினை ஒப்படைப்பது அவசியமானது அதுவே சரியானது.


பணி செய்தலில் ஊழல்கள்:

        "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

     செய்யாமை யானும் கெடும்"

என்ற குறட்பா வழியில் செய்ய வேண்டாதனை செய்தாலும் துன்பம் வரும், செய்ய வேண்டியவற்றை செய்யாவிட்டாலும் துன்பம் வரும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். எனவே ஓர் நிர்வாகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்கள் கடமை உணர்வு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். கடமையை சரிவர செய்யாமல் காலம் தாழ்த்துவது நாளும் பொருள் இழப்பு ஏற்பட நேரிடும் என உணர்த்துகிறார்.
 
   சரியற்ற முறையில் அமையாத உழைப்பு, பலர் துணையாக இருந்து பாதுகாத்தாலும் அது வெற்றி தராது, அது அழிவைத் தரும் என்பதனை,

    "ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

      போற்றினும் பொத்துப் படும்"


என்ற குறட்பா வழி அறியமுடிகிறது.



கல்வி:

      ஆசிரியர்கள் மாணவனை, சிந்தனைத் திறனை தூண்டி பொறுமையோடும், பொறுப்புணர்வோடும் துணைநின்று சிறந்த சிந்தனையாளர்களாக, அறிஞர்களாக உருவாக்க வழிவகை செய்ய வேண்டும். இதனை,

      "இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது 

       உணர விரித்துரையா தார்"


என்ற குறட்பா வழி உணர்த்துகிறார்.

மேலும்,

      "கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

      வல்லதூஉம் ஐயம் தரும்"

என்று குரலில் படிக்காதவற்றை படித்ததாக எனக்கூறி ஒருவர் நடிப்பது, அவர் தெளிவாக அறிந்துவற்றை கூட பிறர் ஐயப்படுமாறு செய்துவிடும் என்கிறார். இதுவும் ஓர் ஊழல் தன்மை வாய்ந்த செயலாகும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


நீதி:

    தனியார் நிறுவனங்களில் உழைப்பாளியின் உழைப்பை உயர் பதவிகளில் இருப்பவர்கள் உறிஞ்சுகின்றனர். இதுவும் ஒரு சமூக அநீதியாகும். நீதி தவறியதால் வரும் கோட்டினை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த முயல்கின்றார் வள்ளுவர். இதனை,
   

     "ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

      நன்றாகா தாகி விடும்"

என்ற குறளில் அறியலாம்.

        "கொடுவில் யான் என்பது அறிகதன் நெஞ்சம்

      நடுவொரீஇ அல்ல செயின்"

என்ற குறட்பாவில் நீதித்துறை எங்கனம் தன் கடமையை செய்ய வேண்டும் என சுட்டிக் காட்டுகிறார் வள்ளுவர்.


ஆன்மீகத் துறை:

        "தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

      வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று"


தவக்கோலத்தில் மறைந்துகொண்டு, தவத்திற்கு எதிரான தீய செயல்களை புரிவது, புதரில் மறைந்து நின்று வேடன் பறவைகளை வலை வீசிப் பிடிக்கும் செயலுக்கு ஒப்பானது என எச்சரிக்கிறார்.


சிறப்புகள் செய்தலும் ஊழலும்:


     திறமைக்கேற்ப சிறப்பித்து விருது வழங்குவதில் வள்ளுவருக்கு பேரார்வம் உண்டு. அதேவேளையில் விருது வழங்குவதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் என்பது திருவள்ளுவரின் எதிர்பார்ப்பு. இதனை,

      "இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்

     சீரல் லவர்கண் படின்"

என்ற குறட்பாவில் அறியலாம். மேலும்,
 

       "சிறப்பு அறிய ஒன்றின் கண் செய்யற்க செய்யின்

       புறப்படு தான் ஆகும்வரை"


என்ற குறட்பாவில் பிறர் அறியும்படி ஓற்றர்களுக்கு சிறப்பு செய்தல் கூடாது, அவ்வாறு செய்தால் மறைக்க வேண்டியதை ஆட்சியாளரை வெளிப்படுத்தியதாக ஆகிவிடும். எனவே சிறப்பித்து விருது அளிப்பதிலும் எச்சரிக்கையாக செய்தல் வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார்.


முடிவுரை:

         "நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

      குற்றமும் ஆங்கே தரும்"


      உலக அரங்கில் ஊழலுக்கு முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்த சான்றோன் திருவள்ளுவர் ஆகத்தான் இருக்க முடியும். நாடு வளம் பெற, உலகமெங்கும் உள்ள மக்கள் தாளாமல் நிலை பெற்று வாழ, "எல்லோருக்கும் எல்லாம், எல்லா உயிர்களுக்கும் எல்லாம்" என்ற உயரிய சிந்தனையுடன் மக்கள் வாழ; மனிதர்கள் ஊழலற்ற சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள திருவள்ளுவர் குறள்வழி வழிவகை செய்கிறார்.













Google Search Keywords:
Anti corruption thirukkural essay, anti corruption essay, essay about corruption, thirukkural government officer essay, blackmail thirukural, black Money thirukkural essay, thirukkural about Black money, everyday life thirukkural essay, impact of human life thirukkural essay, social relevance thirukkural, politics thirukural essay, society thirukural essay,
திருக்குறளும் ஊழல் எதிர்ப்பும், அரசு ஊழியர்கள் திருக்குறள் கட்டுரை, அரசாங்க ஊழியர்கள் குறித்து திருக்குறள், அரசு அரசாங்க ஊழியர் பற்றி வள்ளுவர், அரசு திருக்குறள் கட்டுரை, அரசாங்கம் திருக்குறள் கட்டுரை, வள்ளுவர் ஊழல் எதிர்ப்பு, ஊழல் குறித்து வள்ளுவர், வள்ளுவரும் ஊழலும், திருக்குறளும் ஊழலும், ஊழல் குறித்து திருக்குறள், அன்றாட வாழ்வில் திருக்குறள், மானுட தாக்கம் திருக்குறள்,. ஊழலற்ற சமுதாயம் திருக்குறள், சமூகம் திருக்குறள் கட்டுரை, திருக்குறளில் மானுடத் தாக்கம், அன்றாட வாழ்வியலோடு திருக்குறள் கட்டுரை


No comments:

Post a Comment