THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Monday, July 12, 2021

குறள் கூறும் இல்லறம் FAMILY LIFE IN THIRUKKURAL

 





முன்னுரை:

     மனித வாழ்வுக்கு அனைத்து தேவையான கருத்துக்களை எடுத்துக் கூறும் வாழ்வியல் நூலாக திருக்குறள் விளங்குகிறது. வீரத்தையும் காதலையும் மையமாகக் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. இல்லத்தில் நிகழும் காதல் சார்ந்த உணர்வுகளை அகமென்றும், இல்லத்திற்கு வெளியே நீங்களும் கொடை, நட்பு, போர் ஆகியவற்றை புறம் என்று கொண்டனர். இலக்கியங்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகின்றன. அவ்வகையில் திருக்குறள் வாழ்வியல் கருத்துக்களின் ஊற்றாக விளங்குகிறது. இக் கட்டுரையில் திருக்குறளில் கூறப்பட்டுள்ள இல்லற வாழ்வியல் முறையை பற்றி ஆராய்வதாக அமைகிறது.


திருமணம்:

     "உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

      மடந்தையொடு எம்மிடை நட்பு"


ஒவ்வொருவரின் இல்லற வாழ்க்கை திருமணத்தில் இருந்தே தொடங்குகிறது. இக்குறட்பாவில் தலைவியும் தலைவனும் கொண்ட நட்பு, உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்புக்கு ஈடானது என்கிறார் வள்ளுவர்.


இல்:

     "அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 

      பிறன்பழிப்ப தில்வாயின் நன்று"


      "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன்

        முயல்வாருள் எல்லாம் தலை"


மேற்கண்ட குறட்பா மூலம் தமிழர்கள் அறத்தோடு பொருந்திய இல் வாழ்வினை மேற்கொண்டனர் என அறிய முடிகிறது. திருமண வாழ்வை இல்லறம் என்றனர். இல்லறம் = இல்+அறம் என்ற சொல்லானது இல்லத்திலிருந்து அற வாழ்க்கை வாழ்வதை குறிக்கிறது.


வளமான வாழ்வு:

     "இன்பத்தின் இன்பம் விழையாதான் துன்பத்துள்

      துன்பம் உறுதல் இலன்"


இல்லற வாழ்வின் குறிக்கோள் ஆனது அறம் பொருள் இன்பம் மூன்றும் கொண்டதாகும். இல்வாழ்க்கையில் ஈடுபடுபவர் அறத்தோடு பொருந்திய இன்பத்தை பெற இம்மூன்றையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.


இல்லத் தலைவி:

      கணவனை தெய்வமாக கொண்டு வணங்கும் இல்லறத் தலைவிகள், மழை பெய்ய வேண்டுமென வேண்டும்போது மழை பெய்யும் என்பதை,


     "தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்

       பெய்யெனப் பெய்யும் மழை"


என்ற குறளின் மூலம் இல்லத் தலைவி சிறப்பை அறிய முடிகிறது.


      மகிழ்ச்சி மிகுந்த இனிய சொற்களாலும் அன்பினாலும் இனிய உறுப்பினர்களையும் சொந்தங்களையும் இணைக்கும் பாலமாக விளங்குபவள் இல்லற தலைவிகள் என்று பெண்ணின் அன்பினை போற்றுகிறார் வள்ளுவர். இதனை,

      "முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 

      இன்சொ லினதே அறம்".




கணவன்-மனைவி அறச்செயல்:


      "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

      பண்பும் பயனும் அது"

இல்லற உறுப்பினர்கள் அன்பும் ஒழுக்கமாக இருப்பின், 'இல்லறம் நல்லறமாக அமையும்' என்பதை வள்ளுவர் இங்கு கூறுகிறார்.

மேலும் மேலும் கணவன் அறவழியில் இல்லற வாழ்க்கை நடத்தினால், அவனுக்கு அதனை விட வேறொன்று ஒரு சிறப்பு தேவைப்படாது என்பதை,

     "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 

     போஒய்ப் பெறுவ தெவன்".



மக்கட்பேறு:


      "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 

      சிறுகை அளாவிய கூழ்"


      "குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

       மழலைச்சொல் கேளா தவர்"


இல்லற வாழ்க்கை கோவிலாக அமைய வேண்டுமானால் கணவன் மனைவிக்கு குழந்தை செல்வம் அவசியமாகும். மேற்கண்ட குறட்பாவில் குழந்தைகள் தன் சிறு கையினால் எடுத்துக் கொடுக்கும் உணவினை பெற்றோருக்கு அமுதமாய் இனிக்கும் என வள்ளுவர் கூறுகிறார். மேலும் தன் குழந்தைகளின் மழலைச் சொல்லை கேட்பதன் மூலம் குழலின் இசையும், யாழின் இசையும் இனிது என்பர்
என வள்ளுவர் கூறுகிறார்.


விருந்தோம்பல்:

     "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

       மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று"


தம் வீட்டிற்கு வரும் புதிய நண்பர்களையும் உறவினர்களையும் விருந்தளிப்பது விருந்தோம்பல் எனப்படும். மேற்கண்ட குறட்பாவில் தான் மட்டும் தனித்து உண்பதைத் தவிர்த்து விருந்தினரைப் போற்றி உபசரித்து அவர்களுக்கு உதவி செய்வதே நன்று என்கிறார் வள்ளுவர்.


பகுத்துண்டு வாழ்தல்:


      "பெயக்கொண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

      நாகரிகம் வேண்டு பவர்"

இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர் தன் செல்வங்களை பாதுகாத்தும் பகுத்துண்டு வாழும் பண்பு உடையவராக விளங்குவார். மேலும் தமது சமூக வாழ்க்கையை சிறப்பிக்க ஒருவருக்கொருவர் கொடுத்து உதவி புரிவர் என வள்ளுவர் கூறுகிறார்.

இதேபோல 
அகநானூற்றில்,

      "தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்"


நற்றிணையில்,

      "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

        நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்".



ஈகை:

     

       "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

       குறியெதிர்ப்பை நீர துடைத்து"


என்ற குறட்பாவின் ஒன்றுமில்லாத வாழும் வறுமை உடைய வறியவர்களுக்கு கொடுத்து உதவுதல் ஈகை ஆகும். ஏனைய பொருட்கள் எதிர்பார்த்துக் கொடுப்பதாகும் என்று ஈகையின் மதிப்பை குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


ஒழுக்கம்:


     "பிரிந்தோம்பி காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
      தேரினும் அஃதே துணை"

   ஒழுக்க நெறியிலிருந்து தவறியவர்களுக்கு மானுட வாழ்வில் வாழ தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் ஒழுக்கத்தினை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியமாகும் என வள்ளுவர் கூறுகிறார்.


முடிவுரை:


   பண்டைய தமிழ் சமூகம் அறம் செய்து பொருள் ஈட்டினர். திருமண வாழ்வை இல்லறவாழ்வு என்றனர். தாம் பெரும் செல்வங்களில் சிறந்த செல்வம், இல்லற வாழ்வில் பெரும் குழந்தை செல்வமே. இல்லற வாழ்க்கை எல்லாம் விருந்தினரை போற்றும் உபசரித்து அறநெறிகள் உடன் விருந்தோம்பல் அளிப்பதே. எனவே பாகுபாடில்லாத சமுதாயமாக வளர, ஒவ்வொரு இல்லறமும் வறியவர்களுக்கு உணவு உடை இருப்பிடம் வழங்கி ஈகை மனம் கொண்டவராக, பகுத்துண்டுவராக அமைதல் வேண்டும். இவ்வுலகில் கணவனும் மனைவியும் சிறப்புற்று வாழ இல்லற வாழ்வில் அறத்துடன் வாழ்வது அவசியம்.












Google search keywords:
Family life in thirukkural, human life ethics in thirukkural, life ethics thirukkural, householder thirukkural essay, truth thirukkural essay, hospitality thirukkural, family members thirukural essay, relationship thirukkural, family life ethics, thirukkural about human life, social relevance thirukkural, everyday life in thirukkural, impact of human life thirukkural essay, social relevance thirukkural essay
திருக்குறள் கூறும் இல்லறம், குறள் கூறும் இல்லறம், இல்லறம் குறித்து திருவள்ளுவர், இல்லறம் திருக்குறள் கட்டுரை, திருக்குறள் கட்டுரை சமூகம், கணவன் மனைவி குறித்து திருவள்ளுவர், கணவன் மனைவி திருக்குறள் கட்டுரை, கணவன் மனைவி பொதுகட்டுரை, அன்றாட வாழ்வில் திருக்குறள் கட்டுரை, மானுட தாக்கம் திருக்குறள் கட்டுரை, சமூகம் சார்ந்த திருக்குறள் கட்டுரை, சமுதாயம் குறித்து திருக்குறள் கட்டுரை, விருந்தோம்பல் திருக்குறள், சுயமரியாதை இல் வாழ்க்கை திருக்குறள்


2 comments: