THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Sunday, July 11, 2021

திருக்குறள் காட்டும் மருத்துவம் MEDICINE, MEDICINAL TREATMENT






முன்னுரை:

   ஒரு சிறந்த மருத்துவம் என்பது நோயாளியின் நோயை நீக்குவது அன்று. அந்நோய் மீண்டும் அவர் மீது வராமல் மருந்தளிப்பது சிறந்த மருத்துவம் ஆகும். 'உண்ணும் உணவே மருந்தாக அமையும்', எனவே மனிதன் தன் வாழ்க்கையில் மருந்தை தேடி அலைய அவசியம் இல்லை என்கிறார் வள்ளுவர். இதனை வலியுறுத்தும் விதமாக 'மருந்து' என்னும் அதிகாரத்தை வள்ளுவத்தில் படைத்துள்ளார். மருந்தின் அவசியம், நோய் வருவதற்கான காரணம், அதனைத் தீர்க்கும் வழிகளை வள்ளுவத்தின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.


நோய் பெருந்தொற்று:

"மருந்து ஒன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை

 மாற்றம் காண்பதே நன்று"


     மருந்தினால் தீர்க்கமுடியாத பெரு நோய் தொற்றுக்கு, சுற்றுப்புறத் தூய்மை காண்பதே சிறந்தது என்கிறார் வள்ளுவர். அதுவே தன்னையும் தன்னை சுற்றியுள்ள வரையும் காக்கும் ஆயுதம் ஆகும். (எடுத்துக்காட்டு: 2019இல் தொடங்கிய கொரோனா பெரும் தொற்று).


உணவும் மருந்தும்:

 

     "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

      அற்றது போற்றி உணின்"

  உணவை உண்டதும், செரித்ததும், அறிந்து உணவு உட்கொள்பவர்களுக்கு மருந்து என ஒன்று தேவைப்படாது என்கிறார் வள்ளுவர்.

அதேபோல்,

     "அற்றா லளவறிந் துண்க வ‌ஃதுடம்பு

       பெற்றா னெடிதுய்க்கும் மாறு"


என்ற குறட்பா மூலம் உண்பதனை அளவறிந்து உண்பவனின் உடல், நெடுநாள் நிலைத்து நிற்கும் என்கிறார் வள்ளுவர்.



பசித்ததும் புசி: 


     "தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் 

     நோயள வின்றிப் படும்"


என்ற குறட்பா மூலம் உணவு செரிக்காத பின்பும், அதிகமாக உணவை உட்கொள்வதால் நோய் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் என வள்ளுவர் கூறுகிறார். எனவே பசித்த பின் உணவு உட்கொள்வது அவசியம்.



நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்:

     "இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

     கழிபேர் இரையான்கண் நோய்"


     உணவினை அளவறிந்து உட்கொள்பவனே மானுடன், உணவை முறை சாராமல் அளவறியாமல் உட்கொள்பவை விலங்கு. எனவே அவரவர் உடலுக்கு ஏற்றார் போல் உணவினை குறைத்து உட்கொள்ளுதல் வேண்டும். அதுவே வறுமையிலும் இன்பத்தையும் ஆரோக்கியத்தையும் தரவல்லது.


மருத்துவரின் செயல்பாடு:

      "உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

      கற்றான் கருதிச் செயல்"


      என்ற குறட்பாவில் நோயாளியின் வயதையும் (உற்றான் அளவு), பிணி அளவுயும் (நோயின் அளவு), மருத்துவத்தின் காலத்தையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார். அதுவே பிற்காலத்திலும் தம்மை நோய்வராமல் இருந்து காக்கவல்லது.

 

      "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 

       வாய்நாடி வாய்ப்பச் செயல்"


   என்ற குறட்பாவில் நோயை நீக்குவதை விட, அதற்கான காரணத்தை முன் கூட்டியே அறிந்து நீக்குதல் அறிவுப்பூர்வமான மருத்துவர் செயல்பாடு என வள்ளுவர் கூறுகிறார்.


நோயும் மருத்துவமும்:

      "மகிழும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

      வளிமுதலா எண்ணிய மூன்று"


இக்குறட்பாவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று என்ற சொல் - (வாதம் +பித்தம் +கபம்) என்பதனை குறிக்கிறது. இம் மூன்றில் ஏதேனும் ஒன்று குறைபடுமாயின், உடலின் நோய் உறுதி என்கிறார் வள்ளுவர்.

      "உற்றான் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று 

      அப்பால் நாற் கூற்றே மருந்து"


என்ற குறட்பாவில் 

      நோயாளி (உற்றவன்),

      மருத்துவர் (தீர்ப்பான்),

      மருந்து,

      மருந்தாளுநர் 

மருத்துவம் நான்கு வகையில் அடங்கும் என்பதை கூறுகிறார் வள்ளுவர்.

மருத்துவம் நான்கு வகை போல், நோயும் மூன்று வகை என கூறுகிறார்,
அவை,

1. உடலளவிலான நோய்கள்,

2. மனதளவிலான நோய்கள்,

3. அறிவு/எண்ணம் அளவிலான நோய்கள்

என்கிறார் வள்ளுவர்.



முடிவுரை:


     "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

      பெருந்தகை யான்கண் படின்"


      சித்தம் மருத்துவதத்தில் வேர் முதல் கனி வரை முழுவதும் மருத்துவ பயன் உடையது, மேலும் சிறிய செடி முதல் பெரிய மரங்கள் வரை மருத்துவ பயன் உள்ளன. மேற்கண்ட திருவள்ளூர் குறள் படி, இயற்கை மருத்துவத்தின் மறுவடிவமே சித்த மருத்துவம் எனலாம். இவ்வாறு "உளவியலுடன் கூடிய மருந்து, நோய், உணவுமுறை, வாழ்க்கை நெறி, மருத்துவம் ஆகிய அறிந்த மாதானுபங்கி, மாமருத்துவர்" என்பதில் ஐயமில்லை என்பதைக் கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.














GOOGLE SEARCH KEYWORDS:
MEDICINE IN THIRUKKURAL, MEDICAL TREATMENT IN THIRUKKURAL, THIRUKKURAL ESSAY ABOUT MEDICINE, DOCTOR IN THIRUKURAL, THIRUKKURAL ABOUT FOOD, THIRUKKURAL ABOUT HEALTH, THIRUKKURAL ABOUT MEDICINE, MEDICINAL TREATMENT IN THIRUKKURAL, everyday life in thirukkural, impact of human life, TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, திருக்குறள் காட்டும் மருத்துவம், திருக்குறளில் மருந்து உணவு, உணவு குறித்து திருக்குறள் கட்டுரை, மருந்து திருக்குறள் கட்டுரை, மருத்துவர் திருக்குறள் கட்டுரை, உடல்நலம் திருக்குறள் கட்டுரை, உடல்நோய் திருக்குறள் கட்டுரை, அன்றாட வாழ்வில் திருக்குறள் கட்டுரை, திருக்குறளும் மருத்துவமும், திருக்குறள் மருந்து, வாழ்வியல் பற்றி திருக்குறள்

No comments:

Post a Comment