முன்னுரை:
தமிழ் நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள் ஆகும். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். அது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றை பற்றி விளக்கும் நூல். இத்தகைய சிறப்பு பெற்ற திருக்குறள் மனித வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை இக்கட்டுரை வாயிலாக காணலாம்.
அறமே சிறந்தது:
அறம் ஒழுக்கம் தான் மனிதனை விலங்குகள் பறவைகள் மற்ற பிற உயிர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. விலங்குகள் மனம் போன போக்கில் செயல்படும் குணமுடைய ஆனால் மனிதன் அவ்வாறு செய்வதில்லை எனவே மனிதன் என்பவன் அரசின் சிறந்த காணப்படுகின்றன என்பதை திருக்குறள் எடுத்துரைக்கிறது.
"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"
என்ற குறட்பா வழியாக பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்தது ஒழுகுவதே அறம் ஆகும் என்கிறார். அதனால் அறமே சிறந்தது என்று திருவள்ளுவர் திருக்குறள் வழியாக சுட்டிக்காட்டுகின்றார்.
பெண்ணின் சிறப்பு:
பெண் என்றாலே சிறப்பு என்கின்றனர் நம் முன்னோர்கள் பெண் என்பவள் மகளாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய் ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் ஒரு துணையாகவும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செய்பவளாகவும் காணப்படுகின்றாள். இத்தகைய பெண் எவ்வாறு வாழ வேண்டும் என்று திருவள்ளுவர் புலப்படுத்துகிறார் இதனை,
"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்"
என்ற குறள் வழியாக அறியமுடிகின்றது.
குழந்தைச்செல்வம்:
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் செல்வம் எது என்றால் குழந்தைச் செல்வம் தான். ஒரு ஆண், பெண் வாழ்க்கையில் பிறவி கடனாக கருதுவது இந்த குழந்தைச் செல்வத்தைப் பெறுவது தான். இத்தகைய குழந்தைச் செல்வத்தைப் பற்றி திருவள்ளூர் கூறியிருக்கின்றார். அத்தகைய குழந்தைகள் நல்லவை தீயவை என்று அறிந்து நல்லவைகளை கற்றுக்கொள்ளும் குழந்தைகளை பெறுதல் சிறப்பாகும்,
"பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற"
என்ற குறள் வழியாக அறியமுடிகின்றது.
அன்பற்ற வாழ்க்கை:
மனித வாழ்க்கையில் அன்பு ஒன்றே நிலையானது. யாருடைய வாழ்க்கையில் அன்பு இல்லையோ அவருடைய வாழ்க்கை பாலை நிலம் போன்றது. பாலைநிலத்தில் மரம் வளர்த்தால் அதில் எந்த பயனும் கிடைக்காது, அதே போல் உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் வாழ்க்கை பாலை நிலத்தில் இருக்கும் காய்ந்த மரம் போன்று காட்சி அளிக்கும் என்பதை திருவள்ளுவர் திருக்குறள் வாயிலாக சுட்டிக் காட்டுகின்றார் இதனை,
"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று"
என்ற குறள் புலப்படுத்துகின்றது.
விருந்தினர் உபசரிப்பு:
மனித வாழ்வில் தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்று அவர்களுக்கு வயிறு நிறைய விருந்து படைத்து முகமலர்ச்சியுடன் அனுப்ப வேண்டும். சிலர் அனிச்சம் பூ முகர்ந்த உடன் எப்படி வாடிப் போகும், அதே போல் சில வீட்டுக்கு வரும் முன் விருந்தினருடன் முகத்தில் புன்னகை இல்லாமல் வரவேற்றாள் அனிச்சம் பூ எவ்வாறு முகங்களுடன் வாடிவிடும் அதுபோல் வீட்டுக்கு வந்த விருந்தினர் வாடி விடுவார்கள். இதனை வள்ளுவர்,
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து"
என்ற குறள் வழியாக அறியமுடிகின்றது.
இனிய சொல்:
இவ்வுலகில் மனிதன் என்பவன் தான் பல நிலைகளில் தனது தேவைக்கு ஏற்றாற்போல் பிறரிடம் பேசுகின்றன். அவ்வாறு பேசுபவர்கள் வஞ்சம் நிறைந்து காணப்படுகிறார்கள். ஆனால் மனிதன் என்பவன் தன்னை சுற்றியுள்ள மனிதர்களிடம் அன்பு கலந்த வஞ்சம் இல்லாத சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வள்ளுவர் எடுத்துரைக்கின்றார். இதனை,
" இன்சொல் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்"
என்ற குறள் மூலம் எடுத்துரைக்கின்றார்.
பிறர் மனை நோக்காமை:
பூமியில் வாழும் உயிர்களில் மனிதன் என்பவன் சூழ்நிலை கருதி சில தவறுகளைச் செய்கிறான். இவ்வாறு செய்யும் தவறுகளில் மிகக் கொடுமையானது பிறர் மனைவியை தவறான எண்ணத்துடன் பார்ப்பதாகும். அவ்வாறு பார்ப்பவர்கள் உடைய வாழ்க்கையில் பகை பாவம் அச்சம் பழி என இவை நான்கும் பார்வையிட்டு நீங்காது என்று திருக்குறள் வழியாக வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். இதனை,
"பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்"
என்று குறள் வழியாக எடுத்துரைக்கிறார்.
முதன்மையான அறிவு:
பழிக்குப் பழி என்ற எண்ணத்துடன் வாழும் மனித சமூகத்தில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற கருத்தை திருக்குறள் தெளிவாக எடுத்துரைக்கிறது. மனிதன் என்பவன் தனக்கு ஒருவன் தீமை செய்தால் அவர்களுக்கு தீமை செய்யாமல் நன்மை செய்ய வேண்டும். அவ்வாறு தீமை செய்யாதவர்கள் முதன்மையான அறிவை பெற்றவர்கள் என்று திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார். இதனை,
"அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்"
என்ற குறள் வழியாக அறியமுடிகின்றது.
நிலையாமை உடைய உலகம்:
உலகத்தில் தோன்றிய அனைத்தும் நிலையானதாக உள்ளன. எல்லாம் மாயம் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். நேற்று இருந்தவை இன்று நிலைப்பதில்லை இன்று இருப்பவை நாளை நிலைப்பதில்லை இவ்வாறு நிலையில்லாத உலகில் மனிதன் நிலையில்லாமல் இருக்கின்றான். நேற்று இருப்பவன் இன்று எடுப்பதில்லை என்ற நிலை யாமையை வள்ளுவர் பலப்படுத்துவதே,
"நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்திவ் வுலகு"
என்ற குறள் வாயிலாக அறியலாம்.
பேராசையை விட வேண்டும்:
மனிதன் என்பவன் ஆசையுடன் வாழ்பவன் ஆனால் ஆசை இருப்பினும் பேராசை. உலகில் எல்லாம் தனக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் பல தவறுகளை செய்கின்றார் அவ்வாறு செய்யும் தவறாமல் கிடைக்கும் பாவங்களை விட்டு செல்லாதே என்பார்கள். திருக்குறள் ஆசைகளைப் பற்றி கொண்டு விடாமல் வாழும் மனிதர்களை துன்பங்கள் என்றும் விட்டுச் செல்லாது என்று கருத்தினை எடுத்துரைக்கின்றது.
இதனை,
"பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு"
என்ற குறள் புலப்படுத்துகின்றது.
முடிவுரை:
மனித வாழ்க்கைக்கு ஒரு நூல் பயன்படுவதை வைத்து நூலின் மதிப்பை தெரிந்துகொள்ளலாம் அவ்வகையில் திருக்குறள் மனித வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை இக்கட்டுரை வாயிலாக நம்மால் அறிய முடிகின்றது.
GOOGLE SEARCH KEYWORDS:
திருக்குறளில் மனித வாழ்வியல்,
வள்ளுவர் மனித வாழ்வியல்,
மனித வாழ்வியல் திருக்குறள் கட்டுரை, திருக்குறள் உணர்த்தும் மனித வாழ்வியல், அன்றாட வாழ்வியல், மானுட தாக்கம் திருக்குறள், வாய்மை கட்டுரை, விருந்தோம்பல் கட்டுரை, சமூகம் சார்ந்த திருக்குறள் கட்டுரை, சமுதாயம் சார்ந்த திருக்குறள் கட்டுரை, குடும்ப வாழ்க்கை திருக்குறள் கட்டுரை, இல்லறம் இல்லறவியல் கட்டுரை
Human life ethics in Thirukkural, moral life ethics in Thirukkural, family life ethics, Thirukkural essay, TNPSC GROUP2 MAINS ESSAY, THIRUKKURAL ESSAY TAMIL, SOCIAL RELEVANCE THIRUKKURAL ESSAY, IMPACT OF HUMANITY THIRUKKURAL, EVERYDAY LIFE IN THIRUKKURAL
Nice
ReplyDeleteThanks for uploading thirukkural essays #thirukkuralessays
ReplyDeleteTHIRUKKURAL ESSAY AWESOME
ReplyDeleteSuper pa
ReplyDeleteGood
ReplyDelete