முன்னுரை:
தமிழர் பெரிதும் போற்றும் விருந்தோம்பல் என்னும் பண்பாடு அக்காலம் முதல் இக்காலம் வரை சிறந்து விளங்குகிறது. விருந்தோம்பல் என்பது இல்லற வாழ்வியல் நெறி முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அக்காலத்தில் விருந்தோம்பல் சாதி மதம் பார்க்காமல் நடைபெற்றதை தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அவ்வரிசையில் திருக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் விருந்தோம்பல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
விருந்தோம்பல்:
விருந்தோம்பல் என்பது நமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் விருந்து படைப்பது ஐயோ அல்லது நாம் அவர்களின் வீட்டுக்குச் சென்று உறவினர் நண்பர் என்ற முறையில் விருந்து உண்பது அன்று. விருந்தினர் என்றால் புதிதாக வரும் நபர்களை அழைத்து உணவு படைப்பது ஆகும் இன்னும் கூர்ந்து நோக்கினால் புதிதாக வரும் நண்பர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று உணவு அளிப்பதே விருந்தோம்பலின் இயல்பாகும் பண்பாகும். இதனை வள்ளுவர்,
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து"
இக்குறட்பாவில் அனிச்சமலர் என்பது மென்மைத் தன்மை பொருந்தியது முகர்ந்து பார்த்தால் கூட அனிச்சமலர் வாடிவிடும் அந்த மலரைவிட மென்மையான உள்ளம் படைத்தவர் விருந்தினர் ஆவர், ஆகையால் விருந்தினரை முகமலர்ச்சியோடு உபசரிக்க வேண்டும் இல்லையெனில் அவரது உள்ளம் அனிச்ச மலரை விட வாடிவிடும் என்பதை விளக்குகிறது.
இல்லற விருந்தோம்பல்:
ஒருவர் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவது நோக்கம், வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பது ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாக கருதப்படுகிறது. வீட்டிற்கு வருபவரை விருந்தினராக வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரித்து மகிழாமல் வெளியில் காக்க வைத்து தான் மட்டும் மனைவி மக்களோடு மறைவிலிருந்து உண்பது விருந்தோம்பல் அன்று. உணவே நஞ்சு போன்றது அவர்களை வரவேற்று உணவளித்துப் பின்பே என்பதே தங்கத்தைவிட இனிதாகும். இதனை,
"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று"
என என்கிறார்.
மக்களின் தலையாய பண்பு:
அக்கால மக்களின் தலையாய பண்புகளில் முதன்மையானது விருந்தினரை உபசரித்தல் என்பதாகும். மக்களுக்கு எவ்வளவு சுமைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் இறக்கிவைத்து விட்டு தன்னை நாடி வந்த மனிதர்களுக்கு விருந்து உபசரிப்பர். இவ்வாழ்வில் ஈடுபட்ட தலைவனும், தலைவியும் அறவழியில் சேர்க்கும் பொருளை விருந்தினருக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை,
"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு"
என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்.
செல்வம் குறையாத விருந்தோம்பல்:
தன்னை தேடி வருகின்ற விருந்தினரை நாள் தவறாமல் உபசரிப்பதில் ஒருவனுடைய செல்வம் குறைந்து விடுவதில்லை அப்பன்பே அவனது செல்வத்தை பெருக்கும் என்பதை,
"வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று"
என எடுத்துரைக்கின்றார். மலர்ந்த முகத்துடன் விருந்தினரை உபசரிக்கும் ஒருவனது வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் தான் சேர்த்த செல்வத்தை நல்வழியில் செலவு செய்வதே மகிழ்ச்சியாக மகிழ்ச்சியை சிறந்த செல்வமாகும்.
விருந்தோம்பலின் சிறப்பு:
விருந்து உபசரிப்பு இதற்கு வயது வரம்பு ஒன்றும் கிடையாது தலைவன் தலைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது பிள்ளைகள் நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரித்தல் மிகவும் சிறப்பானதும் நற்பெயரை பெற்றுத் தருவதும் ஆகும்.
விருந்தோம்பலின் வேள்வி:
விருந்தினரை இனிய முறையில் வரவேற்று அவர்களுக்கு பசி நீங்க உணவளித்துப் போட்டுவிடும் வேள்வியில் ஈடுபடாதவர்கள், பின்னர் பொருட்களை வருந்தி காத்து எந்த அறச்செயலையும் செய்யாதவர்கள் பெரிதும் வருந்துவார்கள். இதனை,
"பரிந்தோம்பிப் பின்பற்றும் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்"
என்கிறார், பொருட்களை சிரமப்பட்டுத் தேடிடும் ஒருவன் அவருடைய வாழ்வில் நல்ல அறங்களைச் செய்து இம்மையில் நன்மை பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். இவ்விதம் செய்யாமல் இருந்தோம் ஆனால் இறக்கும்போது எண்ணி எண்ணி வருந்த நேரிடும். ஆகவே நல்ல அறங்களைச் செய்து இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் விருந்தோம்பலை செய்ய போற்றுவோம் என்கிறார்.
பக்தியும் விருந்தோம்பலும்:
மனித வாழ்வில் எச்சூழ்நிலையிலும் இறைவன் அருளை நாடி வருவர் இறைஅன்பர்கள், இவர்களின் அடிப்படை நோக்கம் மற்றவர்களுக்கு உதவுவது ஆகும். அவ்வகையில் அனைவரும் ஏற்றுக் கொள்வது தானம், அதில் இறைவன் பெயரில் பல தான தர்மங்கள் செய்தாலும் அன்னதானம் விருந்தினரை உபசரித்து உணவு அளிப்பதே தமிழர் பண்பாடாக இருக்கின்றது. இதனை,
"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு"
என்று உரைக்கின்றார் வள்ளுவர்.
முடிவுரை:
வளர்ந்து வரும் அறிவியல் உலகத்தில் விருந்தோம்பல் என்பது தமிழ் மொழியைப் போல நாள்தோறும் வளர வேண்டும் தமிழர் பண்புகளில் ஒன்றான விருந்தோம்பலின் சிறப்பினை உலகம் முழுவதும் உணர்ந்து, பிறருக்கும் உணர்த்தி வாழ்வில் மேன்மைஅடைய செய்ய வேண்டும்.
GOOGLE SEARCH KEYWORDS:
திருக்குறள் உணர்த்தும் விருந்தோம்பல்,
திருக்குறளில் விருந்தோம்பல்,
வள்ளுவர் கூறும் விருந்தோம்பல், விருந்தோம்பல் கட்டுரை, திருக்குறள் விருந்தோம்பல் கட்டுரை, விருந்தோம்பல் பற்றி திருக்குறள், அன்றாட வாழ்வியல், மானுட தாக்கம், சமூகம் சார்ந்த திருக்குறள் கட்டுரை, சமுதாய திருக்குறள் கட்டுரை, TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY,
Hospitality in Thirukkural, householder in Thirukkural, family life in Thirukkural, pleasant speech in Thirukkural, Thirukkural essay TNPSC, group 2 mains Thirukkural essay, Thirukkural hospitality, English thirukural essay, everyday life Thirukkural, social relevance Thirukkural essay
விருந்தோம்பல் காக்கவே அக்காலத்தில் திண்ணைகளை கட்டினான், தமிழன் அவை தற்காலத்தில் மறைந்து வருகிறது...ஆனல் நீங்கள் பதிவிடும் திருக்குறளினால் வாழட்டும்..வழிகாட்டட்டும். நன்றி🤘
ReplyDeleteNice good reply
Deleteதமிழக பண்பாடு வளர்க
ReplyDeleteதிரும்ப திரும்ப படிக்க துண்டுகிறது ..திருக்குறள் கட்டுரை
ReplyDeleteThirukkural... Life ethics encyclopaedia
ReplyDelete