முன்னுரை:
நம் வாழ்க்கையானது இல்லறத்தில் தொடங்கி, துறவறத்தில் முடிகிறது.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்"
என்ற குறளில், என் வாழ்க்கையை செம்மையாக நடத்தி சென்றாலே போதும். அதுவே நம்மை மோட்சம், சொர்க்கம், இன்பம், வீடுபேறு, மகிழ்ச்சி, நல்வாழ்வு என்று அனைத்தும் கிடைத்துவிடும். ஆகவே நம் துறவறத்தை நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
இல்லறம் :
இல்லம் என்பது கணவனும் மனைவியும் சேர்ந்து வாழும் இடம். அது மட்டுமின்றி கணவன் மனைவி இருவரின் உறவுக்கான காலம். இல்லத்தில்இருந்து தமக்கும் பிறருக்கும் செய்யும் அறங்களே இல்லரத்திற்கான அறம், அதுவே இல்லறம் ஆகும்.
"அரவிந் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"
என்ற குறலின் வழியாக, பிறர் பழிக்காத வாழ்க்கையை வாழுதல் இல்வாழ்க்கையின் அறமாகும் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.
இல்லற உறவுகள்:
இல்லற வாழ்வில் தாய், தந்தை, மகன், மகள் என்னும் உறவுகளே முதன்மையாகக் கருதப்படுகின்றன.
இவர்களின் உறவு நிலையை,
- தாய், தந்தை, குழந்தைகள் உறவு
- தந்தை மகன் உறவு
- தாய் மகன் உறவு
என்ற படி நிலைகளில் காணலாம்.
தாய், தந்தை, குழந்தைகள் உறவு :
தாயும் தந்தையும் தன் குழந்தைகள் கொண்ட உணவினை அமுதமாகும், அக்குழந்தைகள் தன்னை தீண்டிய உடன் உடலுக்கு இன்பம் அளிப்பதாகவும், அக்குழந்தைகள் பேசிய மொழி செவிக்கு இன்பமாகவும் இருந்தது என்பதனை,
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்" ,
"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு"
என்ற குறல்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
தந்தை மகன் உறவு:
தந்தன் மகன் உறவு நிலையை பற்றி வள்ளுவர்,
"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்" ,
"மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்"
என்ற குறட்பாக்களில் வாயிலாக தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றியும், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியும் பற்றி கூறி இருப்பதன் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
தாய் மகன் உறவு:
தாயின் பசியைப் போக்குவதை விட சான்றோர்களுக்கு ஆளாகாமல் இருப்பதை சிறப்பு என்றும்; தன் மகனை சான்றோர் என்று பிறர் சொல்லைக் கேட்டவுடன் தன் தாய் ஈன்ற பொழுதின்ஐ விட மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் நிலையைப் பற்றியும் வள்ளுவர்,
"ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"
"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி"
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
என்ற குறட்பாக்களின் வாயிலாக உணர்த்துகின்றார் வள்ளுவர். இதன் மூலம் தாய் மகன் உறவு நிலை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
இல்லற ஒழுக்கம்:
இல்லற ஒழுக்கமே இல்லாளின் ஒழுக்கமாகும். ஏனெனில் இல்லற வாழ்வின் முதலிடம் வகிப்பவர் இல்லாளாகிய மனைவியே. காரணம், இவள் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் பேண வேண்டும். அதுமட்டுமின்றி தான் குடி'க்கும் புகழ் சேர்த்து தன் குடும்ப வருமானத்திற்கு ஏற்ற படி செலவினை செய்து வாழ வேண்டும். ஆகவேதான் பெண்ணின்றி எதுவும் நடக்காது என்று கூறுவர். இதனை,
"தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"
"மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை"
என்ற குறட்பாக்களின் வாயிலாக வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
துறவறம்:
இல்லற பொட்டு வேலையும் உலக வாழ்வின் மேலுள்ள ஆசைகளையும் விடுத்து, ஐம்புலன்களையும் அடக்கி தவம் மேற்கொள்வது துறவு வாழ்வாகும். இத்தகைய துறவு வாழ்க்கை வாழ்பவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உட்கொண்டு, காய் கனி கிழங்குகளை மட்டுமே உண்டு உயிர் வாழ்வார்கள். மேலும் பிறர் சொல்கின்ற மனம் விரும்பும் படியான சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களே துறவிகளே மேலானவர்கள் ஆவர். மேலும் வள்ளுவர்,
"துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நேர்க் இருப்பவர்"
"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்"
என்ற குறட்பாக்களின் வாயிலாக, துறவிகள் என்பவர் தூய மனம் உடையவர் என்பதையும் பிறர் மனம் வருத்தம் படியாக கூறுவதையும் பொறுத்துக்கொண்டு வாழ்பவர்களே மேலானவர்கள் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.
இல்லறத்தானே தலைமையானவன் :
துறவு வாழ்க்கை வாழ்பவனை விட இல்லங்களில் இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, நன்மக்களைப் பெற்று, மனைவியையும் காத்து, சுற்றும் தழுவி, சிறந்தன பலவற்றை மேற்கொண்டு வாழும் இல்லறதானே தலைமையானவனாக கருதப்படுகின்றார். என் நெறியாக இருந்தாலும் தன் நிலையை மாறாமல் இயல்பாக இல்வாழ்க்கை மேற்கொள்பவர் தலைமைஆனவன் ஆவான் என்பதனை,
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை"
என்ற குறட்பா வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
துறவறம் விட இல்லறமே சிறந்தது :
தவம்,துறவு என்று நோன்பு நோற்பவர் களைவிட, இனிய இல்லறம் சிறந்த நோன்மை தன்மையுடையதாகும். இதனை,
"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து"
என்ற குறட்பா வாயிலாக வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
இல்லறத்தானே தெய்வம்:
இல்லற வாழ்வில் ஈடுபடுபவர்கள் மட்டுமே அறச்செயல்களை பலவற்றில் ஈடுபட முடியும். அதாவது குறிப்பாக இருந்து பேண முடியும். அவ்வாறு நல்லறமாக இல்லறம் நடத்துபவன்ஐயே தெய்வம் என்று வள்ளுவர் சிறப்பித்துக் கூறியுள்ளார்,
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"
என்ற குறட்பா வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
முடிவுரை/தொகுப்புரை:
1.
இல்லற ஒழுக்கமே இல்லாளின் ஒழுக்கமாகும். ஏனெனில் இல்லறவாழ்வில் முதலிடம் வகிப்பவர் மனைவியே. இவள்தான் இல்லற வாழ்வில் முதலிடம் வகிக்கின்றார்.
2.
தாய்,தந்தை, குழந்தைகள் உறவு ; தந்தை மகன் உறவு; தாய் மகன் உறவு; ஆகிய உறவுகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
3.
துறவிகள் என்பவர் தூய மனம் உடையவர் என்பதையும் பிறர் தன் மனம் வருந்தும் படியாக கூறுவதையும் பொறுத்துக்கொண்டு வாழ்பவர்களே மேலானவர்கள்.
4.
துறவு வாழ்க்கையை வாழ்பவனை விட இல்வாழ்க்கையில் ஈடுபட்டு நன்மக்களைப் பெற்று, மனைவியும் காத்து, சுற்றும் தழுவி, சிறந்தன பலவற்றை மேற்கொண்டு வாழும் இல்லறத்தானே தலைவயானவனாக கருதப்படுகின்றான்.
5. இல்லற வாழ்வில் ஈடுபாடு மட்டுமே அறச்செயல்களை பலவற்றில் ஈடுபட முடியும். அதாவது குறிப்பாக விருந்து பெற முடியும் அவ்வாறு நல்லறமாக எல்லாருமே நடப்பவனே தெய்வமாக கருதுவர்.
GOOGLE SEARCH KEYWORDS:
DOMESTIC LIFE THIRUKURAL ESSAY, RENUNCIATION THIRUKKURAL ESSAY, IMPACT OF HUMANITY THIRUKURAL ESSAY, HUMAN IMPACT THIRUKKURAL ESSAY, THIRUVALLUVAR ABOUT HUMANS THIRUKKURAL ESSAY, EVERYDAY LIFE IN THIRUKKURAL, SOCIAL RELEVANCE THIRUKKURAL ESSAY, TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, இல்வாழ்க்கை திருக்குறள் கட்டுரை, திருக்குறளில் இல்லறமும் துறவறமும், இல்லறமும் துறவறமும் கட்டுரை, இல்லறம் திருக்குறள் கட்டுரை, துறவறம் திருக்குறள் கட்டுரை, டிஎன்பிசி குரூப் 2 தேர்விற்கு திருக்குறள் கட்டுரைகள், அன்றாட வாழ்வில் திருக்குறள், மானுட தாக்கம் திருக்குறள், சமூகம் சார்ந்த திருக்குறள் கட்டுரைகள், சமுதாயம் திருக்குறள் கட்டுரை, அன்றாட வாழ்வியல்
No comments:
Post a Comment