முன்னுரை:
திருக்குறள் தனிமனித வாழ்விற்கும், சமூக வாழ்விற்க்கும் ஒரு சீறிய நெறியை கற்பிப்பதாகவும் உள்ளது. உலக சமுதாயத்தின் மீது வள்ளுவரின் அன்பு கொண்ட காதல் அனைத்து குறட்பாக்களிலும் எதிரொலிக்கிறது. அவ்வாறு சமுதாய நோக்கில் வள்ளுவர் படைத்த திருக்குறள் எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும், மிகத் தேவை உள்ளதாக இருக்கின்றன என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
திருக்குறளும் சமுதாயமும்:
வள்ளுவர் கண்ட சமுதாயம் வரலாற்றிற்க்குரியது, அவர் காண விரும்பிய சமுதாயம் எதிர்காலத்திற்கு உரியது. தற்போது உள்ள மக்கள் வள்ளுவர் கூறும் சமுதாய அமைப்பின் மீது, எழுச்சியும் உறுதிபூண்டு அதற்குரிய செயலில் தீவிரமாக இறங்கி சமுதாயத்தின் மேல் வள்ளுவர் போன்று அன்பு கொண்டு வாழ்ந்து வந்தால், நாளைய வரலாற்றில் இன்றியமையாத இடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
மனித இலக்கணம் உடமைகள்:
அன்புடைமை, அறிவுடைமை, ஆள்வினையுடைமை (25), அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, பண்புடைமை, ஊக்கமுடைமை, நாணுடைமை, ஆள்வினையுடைமை(62)
என 10 உடைமைகளாகத் தனித்தனி அதிகாரம் படைத்துள்ளார் வள்ளுவர். மேற்கண்ட பத்து உடைமைகளையும் கொள்வோர் மனிதருள் மாமனிதராக விளங்குவர்.
களைய வேண்டிய வாழ்க்கை சீர்கேடுகள்:
கள்ளுண்ணாமை, வரைவின் மகளிர், கூடா நட்பு, சூது, தீ நட்பு எனத் தனித் தனி அதிகாரம் மூலம் தலைவி எதிர்ப்புக் குரலை கொடுத்தார். மேலும் குரான், பைபிள் போன்ற சமயநூல்களில் வெளிப்படும் புலால் உண்ணாமை, கொல்லாமை போன்ற அறநெறிக் கருத்துக்கள் திருக்குறளில் அதிகாரங்களாக பிரதிபலிக்கிறது.
தனிமனிதனும் சமுதாயமும்:
ஒரு சமுதாயத்தின் முன்னேற்றமானது ஒவ்வொரு தனிமனித வாழ்வின் வெற்றியில் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக அறன்வலியுறுத்தல், விருந்தோம்பல், இனியவை கூறல், பயனில சொல்லாமை, ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வாய்மை, வினைத்தூய்மை, இன்னாசெய்யாமை, சிற்றினம் சேராமை போன்ற அதிகாரம் மூலம் வழங்கி உள்ளார்.
கல்வி:
கல்வி, அறிவுடைமை, கேள்வி, கல்லாமை என நான்கு அதிகாரங்களை கல்வியை பொற்றுவதற்காக படைத்துள்ளார்.
1. கல்வி:
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
2. கல்லாமை:
கல்லாதவன் மிக்க அழகு உடையவனாக இருந்தாலும் அவன் அழகு, மண்ணால் சிறப்புற செய்யப்பட்ட பொம்மையின் அழகிற்கு ஒப்பாகும் என்கிறார். மேற்குடியில் பிறந்தும் கல்லாதவரே விட கீழ்குடியில் பிறந்த கற்றவரே உயர்ந்தவர் என்கிறார்.
3. கேள்வி:
கேள்விச் செல்வமே செல்வத்துள் தலை என்றார். சிறந்த செவி சுவை உணராது, வாயுவை மட்டுமே உடையவர் இருந்தால்தான் என்ன? இறந்தால்தான் என்ன? என எச்சரிக்கிறார்.
4. அறிவுடைமை:
எப்பொருள் காணினும் அப்பொருளில் உண்மை இயல்பை ஆராய்வது அறிவு. அறிவில்லாதவர்கள் எல்லா பொருளைப் பெற்று இருந்தாலும் ஒன்றும் இல்லாதவராக கருதப்படுவர்.
இல்வாழ்க்கை:
தாய் தந்தை உறவு, தாய் மகன் உறவு, தந்தை மகன் உறவு, மக்கட்பெரு முதலியவை இல்வாழ்க்கையில் இன்புற முடியும் என கூறுகிறார். பிறர் பழிக்கப்படாத இல்வாழ்க்கையை சிறந்த அறம். இல்வாழ்க்கையில் அன்போடு அறம் செய்து வாழ்ந்து வந்தால்தான் அதன் முழு பயனையும் அடைய முடியும் என்கிறார்.
வாழ்க்கைத்துணை நலம்:
இல்லற மனைவியின் நற்பண்புகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்கிறார். காரணம், தன்னையும் காத்து, தன்னுடைய கணவனையும் காத்து தம் மக்களையும் போற்றி வளர்ப்பவள் மனைவி தான். மகளிரை பிறர் அடுக்கி காக்கும் காவலை அவர் விரும்பவில்லை. புகழத்தக்க நல்ல மனைவியை பெறாத கணவருக்கு பெருமிதம் இல்லை என்கிறார்.
சமுதாய நோக்கில் இறவாத்தன்மை:
இன்றைய சமூக சிந்தனைகளும், 2000ம் ஆண்டுக்கு முன்பு இருந்த சமூக சிந்தனைகளும் மாறுபட்டு இருந்தாலும் , வள்ளுவர் எழுதிய திருக்குறள் எக்காலத்திற்கும் பொருந்தும் சமுதாய நிலையை பிரதிபலிக்கிறது. எனவேதான் வீரமாமுனிவர் 1730-இல் திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார், 1886இல் ஜி யு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார், ஜெர்மனி மொழியில் கிரவுல் என்பவர் மொழிபெயர்த்தார், மேலும் 125 மேற்பட்ட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருக்குறள் புதிய சமுதாய சிந்தனைகளை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. திருக்குறள் ஒரு சமுதாய வழிகாட்டியாய், நண்பராய், இன்றியமையாத வாழ்வில் விளக்காய் ஒளிக்கிறது.
முடிவுரை:
எந்நாட்டிற்கும்,
எக்காலத்திற்கும்,
எச்சமயத்திற்கும்,
எக்காலத்திற்கும்
எம்மொழிக்கும்,
எத்துறைக்கும்,
எச்சூழலுக்கும்,
எச்சமுதாயத்திற்கும்
Best book in the human era
ReplyDelete